தமிழக சட்டபேரவை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், திரைப்பட இயக்குனர் கே.வி ஆனந்த் மற்றும் குணசித்திர நடிகர் செல்லத்துரை மறைவிற்கும் இரங்கல் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், நேற்று கருத்து கணிப்பு என்ற பேரில் ஒரு கருத்து திணிப்பு நடைபெற்றுள்ளது என விமர்சித்தார். இது கருத்து கணிப்பே இல்லை என்றும் பல கட்டங்களில் இந்த கருத்து திணிப்புகளை எல்லாம் தவிடுபொடியாக்கி அதிமுக […]
ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.அதிமுகவில் விருப்பமனு விநியோகம் இன்று முதல் தொடங்கியது.தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், இன்று முதல் மார்ச் 5-ஆம் தேதி வரை விருப்பமனு பெற்று பூர்த்தி செய்யலாம் என்றும், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்பமனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப […]
தினகரன் அழைப்பு விடுப்பது திமுகவிற்குத்தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,திடீரென்று ஒரு மாயையை ஏற்படுத்தி ,ஒரு பில்டப் தர வேண்டாம்.பணம் கொடுத்து கூடும் கூட்டமெல்லாம் நிலைத்து நிற்கப்போவதில்லை.அதிமுக மிகப்பெரிய இயக்கம்.கூட்டம் நடைபெறும் போது கட்சியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்.கருத்து வேறுபாடுகள் எல்லாம் அண்ணன் -தம்பி பிரச்சினை,இதெல்லாம் ஒற்றுமையில் இருந்து செயல்பட வேண்டும் என்று அமைச்சர் வேலுமணி கூறினார்.அப்படித்தான் அவர் கூறினார்.அதுக்கு […]
சசிகலா காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சசிகலா காரில் அதிமுக கொடி : பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவிற்கான சிகிச்சையை சசிகலா பெற்று வந்த நிலையில் கடந்த 31-ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.மருத்துவமனையில் இருந்து புறப்படும் போது சசிகலாவுக்கு சொந்தமான காரின் முகப்பில் அதிமுக கொடி பொருத்தப்பட்டு இருந்தது. இது அரசியலில் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. தினகரன் கருத்து : இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற […]
பொள்ளாச்சி வழக்கில் யார் தவறு செய்தலும் அவர்கள் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழகத்தையே உருக்கிய சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஆகும்.இந்த வழக்கு தொடரபாக முதலில் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த வழக்கு தொடர்ப்பன விசாரணைகளை சிபிஐ மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக 2 ஆண்டுகளுக்குப் பிறகு பொள்ளாச்சி நகர அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் அருளானந்தம், ஹெரென் பால், பாபு ஆகிய மூவரையும் சி.பி.ஐ. […]
அதிமுக முடிவு செய்து அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி அதிகாரபூர்வமாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.நீண்ட நாட்களாக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து முடிவு எடுப்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில் பல கட்ட ஆலோசனைக்கு பின்னர் பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே அண்மையில் […]
பிக் பாஸ் உள்ளிட்டவை எடுத்து சமூகத்தை சீரழிக்க கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நேற்று முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது நடிகர் கமல் ஹாசனை விமர்சித்துப் பேசினார்.செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,பிக்பாஸ் நடத்துகிறவர் எல்லாம் அரசியல் செய்தால் எப்படி இருக்கும்.பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி,நன்றாக இருக்கும் குடும்பங்களையும் கெடுக்கிறார்.இப்படிப்பட்ட தலைவர்கள் சொல்கின்ற கருத்துக்களை நீங்கள் சொல்லலாமா? என செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார். மேலும் அவர் கூறுகையில், கமல்ஹாசன் நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று […]
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன. இதனிடையே முதலமைச்சர் பழனிசாமி திருவாருரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவரிடம் , பாஜக தலைமையில் கூட்டணி என சொல்லப்படுகிறதே ? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.இதற்கு […]