#Breaking:அதிமுக ஆட்சியில் ரூ.516 கோடி முறைகேடு – அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு

Minister I.Periyasamy accused the abuse of Rs 516 crore in the AIADMK regime.

அதிமுக ஆட்சியில் பயிர்கடன் வழங்கியதில்  ரூ.516 கோடி அளவில் முறைகேடு நடந்துள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,அதிமுக ஆட்சியில் பயிர்கடன் வழங்கியதில்  ரூ.516 கோடி அளவில் முறைகேடு நடந்துள்ளதாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம் சாட்டியுள்ளார்.அதாவது,சிட்டா அடங்கலில் குறிப்பிடப்பட்ட சாகுபடி நிலங்களில் பரப்பளவை அதிகரித்து காட்டி பலமடங்கு கூடுதல் கடன் பெற்றுள்ளதாகவும்,சேலம் ,நாமக்கலில் மட்டும் ரூ.503 கோடி அளவில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

#Breaking:அதிமுக ஆட்சியில் ரூ.516 கோடி முறைகேடு – அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு