நல்ல சூழலில் வளர்ந்த ஆண்கள் பெண்களை பற்றி தவறாக பேசமாட்டார்கள் – குஷ்பூ

நல்ல சூழலில் வளர்ந்த ஆண்கள் பெண்களை பற்றி தவறாக பேசமாட்டார்கள் என குஷ்பூ பேட்டி.

நல்ல சூழலில் வளர்ந்த ஆண்கள் பெண்களை பற்றி தவறாக பேசமாட்டார்கள் என குஷ்பூ பேட்டி.

நடிகையும், பாஜக நிர்வாகியுமானகுஷ்பூ,தன்னை தரக்குறைவாக பேசிய திமுக பேச்சாளர் மற்றும் அவரது பேச்சை ரசித்தபடி அமர்ந்திருந்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திதேசிய மகளிர் ஆணையத் தலைவர் ஷர்மரேகாவிடம் புகார் அளித்தார்.

அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குஷ்பூ, நல்ல சூழலில் வளர்ந்த ஆண்கள் பெண்களை பற்றி தவறாக பேசமாட்டார்கள். பெண்கள் குறித்து தவறாக பேசும் போது அதை ரசிக்கவும் மாட்டார்கள். மேலும், இந்த சம்பவம் குறித்துதேசிய மகளிர் ஆணையத் தலைவர் ஷர்மரேகா விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.