மாயாவதியின் தாயார் மரணம் : நேரில் சென்று இரங்கல் தெரிவித்த பிரியங்கா காந்தி!

Priyanka Gandhi has expressed condolences over the death of BJP leader Mayawati's mother.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் தாயார் உயிரிழந்துள்ள நிலையில், பிரியங்கா காந்தி நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமாகிய மாயாவதி அவர்களின் தாய் ராம்ரதி அவர்கள் உடல் நலக்குறைவால் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து இன்று மாயாவதியின் தாயாருக்கு இறுதி சடங்கு டெல்லியில் நடைபெற உள்ள நிலையில், லக்னோவில் இருந்து மாயாவதி டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி அவர்கள் இன்று மாயாவதியை நேரில் சந்தித்து அவரது தாயார் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.