காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக ராகுல் காந்தி மேற்கொண்டிருக்கும் பாரத் ஜோடோ யாத்திரையில் அவர் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் சண்டௌலியில் ராகுல் காந்தி இன்று பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொள்ளும் நிலையில் அதில் தனது சகோதரரருடன் இணைந்து கொள்ள பிரியங்கா காந்தி திட்டமிட்டிருந்த போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து பிரியங்கா காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில், “நான் இன்று […]
தொழில் அதிபர் சஞ்சய் பண்டாரிக்கு எதிரான வருமான வரி ஏய்ப்பு போன்று பல குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறை, சிபிஐ விசாரித்து வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு தப்பி ஓடிய அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த அந்நாட்டு அரசு கடந்த ஜனவரியில் ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில், ஹரியானாவில் நில மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பிரியங்கா காந்திவுடன் அவரது கணவர் ராபர்ட் வத்ராவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் , தொழிலதிபர் சஞ்சய் […]
இம்மாதம் அறிவிக்கப்பட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் சத்தீஸ்கர், மிசோராம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநில சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மீதம் உள்ள தெலுங்கானா மாநிலத்தில் நாளை மறுநாள் நவம்பர் 30இல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 119 தொகுதியில் 98 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் 2வது முறையாக ஆட்சியை பிடித்து இருந்தது பாரதிய ராஷ்டிரிய கட்சி (பிஆர்எஸ்). கடந்த 2 முறையும் சந்திரசேகர […]
ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தியுடன் பிரியங்கா காந்தி தனது மகனுடன் கலந்து கொண்டார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் பாரத ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். தமிழகம், கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா என கடந்து தற்போது மத்திய பிரதேசத்தில் தனது நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். தற்போது மத்திய பிரதேசத்தில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தியுடன் இரண்டாவது நாளாக பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். அதில், தனது மகனுடன் இணைந்து ஒற்றுமை யாத்திரையில் […]
இன்று ராஜஸ்தான் வரவிருந்த, ராகுல் காந்தி உடல் நலக்குறைவு காரணமாக தனது பயணத்தை ரத்து செய்து உள்ளார். சில மணி நேரங்களுக்கு முன்னர் தான் காங்கிரஸ் கட்சி முக்கிய தலைவர்களில் ஒருவரான ப்ரியங்கா காந்தி தனக்கு மீண்டும் கொரோனா வந்துவிட்டதாக டிவிட்டரில் தெரிவித்து இருந்தார். இதனால் அவர் வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் முக்கிய தலைவரான ராகுல் காந்தி இன்று ராஜஸ்தான் செல்ல வேண்டி இருந்தது. அங்கு அவரது கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்தார். […]
குத்துச்சண்டையில் தங்க பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை நிகாத் ஷரீனுக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து. துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் 12-வது பெண்கள் உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 52 கிலோ எடைப் பிரிவில் இந்திய அணி சார்பாக 25 வயதாகும் நிகாத் ஷரீன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார். நேற்று நடைபெற்ற உலக மகளிர் குத்துச்சண்டை இறுதிப்போட்டியில் நிகாத் ஷரீன், தாய்லாந்து வீராங்கனை ஜூடாமாஸ் ஜிட்பாங்குவை எதிர்கொண்டார். இந்த […]
காவல் நிலையங்கள் பெண்களுக்கு பாதுகாப்பாய் இருப்பதை உபி அரசு உறுதி செய்வதை பற்றி எப்பொழுதாவது சிந்தித்து இருக்கிறதா? என பிரியங்கா காந்தி ட்வீட். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 13 வயது தலித் சிறுமி ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக லலித்பூர் காவல்நிலையத்திற்கு புகாரளிக்க சென்ற சிறுமியை காவல் நிலைய இல்ல அதிகாரி ஒருவர் மீண்டும் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பிரியங்காகாந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், […]
உத்தர பிரதேச தேர்தல் பரப்புரையின் போது பாஜக தொண்டர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதற்கட்டமாக 58 தொகுதிகளுக்கும், 2 வது கட்டமாக 55 தொகுதிகளுக்கும் , 3 ஆம் கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளில் ஏற்கனவே வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், உத்தரப்பிரதேச சட்டசபை […]
கொரோனா பரவல் எதிரொலியாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். டெல்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓமைக்ரான் பரவி வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவல் எதிரொலியாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எனது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், எனது ஊழியர் ஒருவருக்கும் கோவிட்-19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. நான் பரிசோதனை செய்ததில், நெகட்டிவ் என சோதனை முடிவுகள் வந்தது. இருப்பினும் நான் தனிமைப்படுத்தப்பட்டு சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் […]
நாகலாந்தில் இருந்து வந்த செய்தி இதயத்தை உலுக்குகிறது. உறவினர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழந்த வருத்தங்களை தெரிவித்து கொள்கிறேன். நாகாலாந்தின் ரைஃபிள்ஸ் பாதுகாப்புப் படையினருக்கு மோன் மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்று மாலை பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடத்தினர். அமோன் மாவட்டத்தில் உள்ள ஓடிங் மற்றும் திரு கிராமங்களுக்கு இடையே உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏராளமான கூலித் தொழிலாளர்கள் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் […]
பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, உங்கள் வார்த்தைகள் வெற்றுத்தனம், நீங்கள் விவசாயிகளின் ஆதரவாளர் அல்ல, நீங்கள் வாக்குகளின் அனுதாபி என்று பிரியங்கா காந்தி ட்விட் செய்துள்ளார். டெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், இந்த குளிர்காலக் கூட்டத்தொடரானது டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்படி,நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில், 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது மற்றும் 26 மசோதாக்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றத் திட்டமிட்டிருந்தது. இன்று காலை […]
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் தாயார் உயிரிழந்துள்ள நிலையில், பிரியங்கா காந்தி நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமாகிய மாயாவதி அவர்களின் தாய் ராம்ரதி அவர்கள் உடல் நலக்குறைவால் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து இன்று மாயாவதியின் தாயாருக்கு இறுதி சடங்கு டெல்லியில் நடைபெற உள்ள நிலையில், லக்னோவில் இருந்து மாயாவதி […]
மோடி அரசின் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைப்பு, இது பயத்தால் எடுக்கப்பட்ட முடிவு, இதயத்தில் இருந்து அல்ல. நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி இன்று முதல் ரூ.5 மற்றும் ரூ.10 குறைக்கப்படும் என்று தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, இந்த அறிவிப்பானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இந்த விலை குறைப்பு வாகனஓட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த […]
லக்கிம்பூர் கேரி விவசாயிகள் போராட்டத்தில் 8 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு, ஒரு நபர் ஆணையத்தை உத்தர பிரதேச அரசு அமைத்துள்ளது. உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்வர், மத்திய இணை அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சிக்கு அருகே மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் பேரணியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷின் பாதுகாப்பிற்காக உடன் சென்ற […]
விவசாயிகளை ஒடுக்க நினைப்பவர்கள் நாட்டில் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர். நீதியின் குரலை எப்போதும் அடக்க விடமாட்டோம் என பிரியங்கா காந்தி ட்வீட். லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்ற போது போலீசார், பிரியங்கா காந்தியை அந்த கிராமத்திற்குள் அனுமதிக்காமல் கிராம எல்லையிலேயே போலீசார் கைது செய்த நிலையில், அவர் மீது வழக்குப் பதிவும் செய்தனர். இதனைத் தொடர்ந்து,காங்கிரஸ் எம்.பி ராகுல் […]
லக்கிம்பூர் செல்ல காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்வர், மத்திய இணை அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சிக்கு கருப்புக் கொடி காட்ட வந்த விவசாயிகள் மீது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனின் கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே விவசாயிகள் நான்கு பேரும், பொதுமக்கள் நான்கு பேரும் உயிரிழந்தனர்.மேலும் பலர் காயமடைந்தனர். இதனையடுத்து,லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து […]
பிரியங்கா காந்தி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் சீதாபூரில் மொபைல் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா அவர்களின் மகனுடைய கார் மோதியதில் 4 பேர் மற்றும் கலவரத்தில் என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர்.இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.இதனால்,விவசாயிகளின் குடும்பத்தை நேரில் சந்திக்க அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டும் வருகிறது. இதனைத் தொடர்ந்து,கடந்த இரு தினங்களுக்கு முன்னர் விவசாயிகளை […]
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் இன்று லக்கிம்பூர் செல்ல இருந்த நிலையில், உத்திர பிரதேச அரசு அனுமதி மறுத்துள்ளது. உத்திரபிரதேசம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அமைச்சர் மகனின் கார் மோதி 2 விவசாயிகள் உயிரிழந்தனர்.இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் சென்ற போது […]
உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூரில் பாஜக வன்முறை என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கார் மோதியதில் 4 பேர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.மேலும்,விவசாயிகளின் குடும்பத்தை நேரில் சந்திக்க அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டும் வருகிறது.இந்த சம்பவத்துக்கு,நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து,நேற்று விவசாயிகளை சந்திக்க லக்கிம்பூர் சென்ற காங்கிரஸ் […]
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கார் மோதியதில் 4 பேர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.மேலும்,விவசாயிகளின் குடும்பத்தை நேரில் சந்திக்க அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டும் வருகிறது.இந்த சம்பவத்துக்கு,நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து,நேற்று விவசாயிகளை சந்திக்க லக்கிம்பூர் […]