சிறப்பாக செயல்படும் சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு "மணிமேகலை விருது"..!

It has been announced that the Manimegalai Award will be given to the best performing community based organizations.

சிறப்பாக செயல்படும் சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் துறை ரீதியான மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது. இன்று உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. அப்போது சட்டப்பேரவையில் பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவி குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் நகர்ப்புற பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு “மணிமேகலை விருதுகள்” வழங்கிய இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார்.