#ELECTION BREAKING: பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு..!

The Pattali Makkal Katchi has been allotted the mango symbol in the Assembly elections.

சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு, கூட்டணி உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக,பாமகவுக்கு மட்டுமே தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட பாமகவிற்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம்.  பாமகவின் கோரிக்கையை ஏற்று தமிழகத்திலும் மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. புதுச்சேரியில் ஏற்கனவே மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருந்தது.

இதனால், அதிமுக கூட்டணியில் உள்ள பாமக 23 தொகுதிகளிலும் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளது. அதிமுக கூட்டணியில் இதுவரை பாமகவிற்கு 23, பாஜகவிக்ரு 20 தொகுதிகள் சட்டப்பேரவையில் தேர்தலில் ஒதுக்கீடு செய்து, ஒப்பந்தம் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node
#ELECTION BREAKING: பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு..!