விடுதலை போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த தினம் – பிரதமர் மோடி வாழ்த்து!

As the birthday of freedom fighter Bhagat Singh is being celebrated today, Prime Minister Modi has congratulated him on his Twitter page.

இன்று விடுதலை போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த தினம் கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், புரட்சியாளருமாகிய பகத்சிங் அவர்களின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இவரது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பகத் சிங் வீரம் நிறைந்த ஒவ்வொரு இந்தியன் மனதிலும் வாழ்ந்து வருகிறார்.

அவரது தைரியம் மிகுந்த தியாகம், எண்ணற்ற மக்களிடையே நாட்டுப்பற்றுக்கான தீயை பற்ற வைத்தது எனவும் தெரிவித்துள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு நான் தலைவணங்குகிறேன், அவரது உயரிய கருத்துக்களையும் நினைவு கூறுகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

unknown node