வ.உ.சிதம்பரனார் அவர்களின் 86-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி கனிமொழி எம்.பி ட்வீட்.
இன்று வ.உ.சிதம்பரனார் அவர்களின் 86-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், அவரது தியாகத்தை போற்றி அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இன்று வ.உ.சிதம்பரனார் அவர்களின் 86-ஆம் ஆண்டு நினைவு நாள். வாய்த்த வழிகளிலெல்லாம் நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்டவரை, தன்னுரிமைப் போராட்டதிற்கும் தியாக வாழ்விற்கும் எடுத்துக்காட்டாக நிற்பவரை நினைவில் ஏந்திப் போற்றிடுவோம்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node