வ.உ.சிதம்பரனார் அவர்களின் 86-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி கனிமொழி எம்.பி ட்வீட். இன்று வ.உ.சிதம்பரனார் அவர்களின் 86-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், அவரது தியாகத்தை போற்றி அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இன்று வ.உ.சிதம்பரனார் அவர்களின் 86-ஆம் ஆண்டு நினைவு நாள். வாய்த்த வழிகளிலெல்லாம் நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்டவரை, தன்னுரிமைப் போராட்டதிற்கும் தியாக வாழ்விற்கும் […]
75-வது சுதந்திர தின விழா 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி பிரிட்டிஷ் அரசிடமிருந்து இந்தியா விடுதலை அடைந்தது. நம் முன்னோர்கள் நாட்டிற்காக பல தியாகங்கள் செய்து கிடைத்ததுதான் இந்த சுதந்திரம். நம் முன்னோர்களை போற்றும் வகையில் இத்தினத்தை நாம் அவசியம் கொண்டாட வேண்டும். வரும் ஆகஸ்ட்15-ம் தேதி இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தேசத்தந்தை மகாத்மா காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவரான மகாத்மா […]
பாரதியார் பெயரிலும்,வ.உ.சி. பெயரிலும் ஆய்வு இருக்கைகள் அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க உயர்கல்வித்துறை உத்தரவு. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரிலும்,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் வ.உ.சி. பெயரிலும் ஆய்வு இருக்கைகள் அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.சிண்டிகேட்டின் ஒப்புதலைப் பெற்று பதிவாளர்கள் பணிகளை தொடங்க உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும்,திருவள்ளுவர்,பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காகிதமில்லா செமஸ்டர் தேர்வுகளை நடத்தவும் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.அதன்படி,வரும் செமஸ்டர் தேர்வுகளிலேயே 20% தேர்வை காகிதமில்லா முறையில் நடத்தவும் […]
வ.உ.சிதம்பரனார் பெயரில் ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசுடன் கப்பலோட்டிய தமிழன் விருது வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு. இன்று நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி, ஆண்டுதோறும் வ.உ.சிதம்பரனார் பெயரில் ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசுடன் கப்பலோட்டிய தமிழன் விருது வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். கப்பல் தொடர்பான துறைகளில் ஈடுபட்டு சிறந்த பங்காற்றி வரும் தமிழர் ஒருவருக்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி […]