#BREAKING: சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் பதவியேற்றார்..!

Former Chief Minister Edappadi Palanisamy has been sworn in as a Member of the Legislative Assembly.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார்.

இன்று கலைவாணர் அரங்கில் 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பதவி ஏற்று வருகின்றனர். இவர்களுக்கு பதவியேற்று வைக்க தற்காலிக சபாநாயகராக திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டி நியமனம் செய்யப்பட்டு ஆளுநர் முன்னிலையில் நேற்று தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முதலில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்கும்போது ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ என்றுக் கூறி எம்.எல்.ஏவாக மு.க ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார். மு.க.ஸ்டாலினை தொடர்ந்து அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இதற்கிடையில், முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார். இவரை தொடர்ந்து, தமிழக முன்னாள் துணை முதலமைச்சரும் , போடிநாயணக்கனூர் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் பதவியேற்று கொண்டார்.