வேளாண் சட்டத்துக்கு தனித் தீர்மானம் குறித்த விவாதத்தின்போது தன் நிலைமை நீர்வளத்துறை அமைச்சருக்கே தெரியும் என்று எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று 6-வது நாளாக நடைபெற்று வருகிறது. இன்றை தினம் கால்நடை, வேளாண் மற்றும் மீன்வள ஆகிய துறைகளின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதன்படி,சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.இதனையடுத்து, தமிழக […]
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடியவர்களின் மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இதனையடுத்து,மூன்று சட்டங்களும் நாட்டின் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கு உகந்ததாக இல்லை. மத்திய அரசின் சட்டத்தின் மூலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறி தமிழக அரசின் தனி தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் […]
சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது வெளிநடப்பு செய்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த 9 மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டாலும், இதற்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. இந்த நிலையில் இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் […]
தமிழக சட்டப் பேரவை கூட்டத்தொடர் செப்டம்பர் 13 ஆம் தேதியன்று முன்கூட்டியே முடித்து வைக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 13-ஆம் தேதி சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கியது. அப்போது தமிழக அரசின் மாநில பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதையடுத்து, மறுநாள் 14ம் தேதி முதன் முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் பட்ஜெட்டை, வேளாண் துறை […]
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார். இன்று கலைவாணர் அரங்கில் 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பதவி ஏற்று வருகின்றனர். இவர்களுக்கு பதவியேற்று வைக்க தற்காலிக சபாநாயகராக திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டி நியமனம் செய்யப்பட்டு ஆளுநர் முன்னிலையில் நேற்று தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முதலில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்கும்போது ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ என்றுக் கூறி எம்.எல்.ஏவாக […]
வரும் சட்டமன்ற தேர்தலில் 178 இடங்களில் திமுக நேரடியாக போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், பிரதான கட்சியான அதிமுக, திமுக தங்களது கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து இறுதி செய்ய தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி ஒருபக்கம் அதிமுக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு உறுதி செய்து வருகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள பாமாவிற்கு 23 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. மறுபுறம் திமுக […]