#BREAKING: குறிஞ்சிப்பாடி தொகுதி வேட்பாளர் மாற்றம்.. அதிமுக அறிவிப்பு..!

குறிஞ்சிப்பாடி தொகுதி வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டதாக  முதல்வர், துணை முதல்வர் அறிவித்துள்ளனர்.

குறிஞ்சிப்பாடி தொகுதி வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டதாக  முதல்வர், துணை முதல்வர் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இதைத்தொடர்ந்து, அதிமுகவின் வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டு இருந்தனர்.

இந்நிலையில், குறிஞ்சிப்பாடி தொகுதி வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டதாக  முதல்வர், துணை முதல்வர் அறிவித்துள்ளனர். முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 6.4.2021 அன்று நடைபெற உள்ள தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், கடலூர் மத்திய மாவட்டம், (156) குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளருக்கு பதிலாக,

unknown node

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக திருமதி.செல்வி இராமஜெயம் அவர்கள் (கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் கடவார் கிழக்கு மாவட்ட மகளிர் அனரித் செயலாளர் முன்னாள் அமைச்சர்) தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அறிக்கையில் தெரிவித்த்துள்ளார்.