"நீங்கள் எனக்கு ஒரு சிறந்த ஆசிரியர்;மிஸ் யூ அப்பா"- குஷ்பு ட்வீட்..!

Karunanidhi birthday, Khushboo tweet, "You are a great teacher to me, Miss You Dad"

கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு, “நீங்கள் எனக்கு ஒரு சிறந்த ஆசிரியர் ,மிஸ் யூ அப்பா” என்று குஷ்பு ட்வீட் செய்துள்ளார்.

முன்னாள் முதல்வர் மற்றும் திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 98வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திமுக தொண்டர்கள் உள்பட பலரும் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

மேலும்,முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் கருணாநிதி சமாதியில் மலர் அஞ்சலி செலுத்தினார்.அதுமட்டுமல்லாமல்,இன்று பல திட்டங்களையும் அறிமுகப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து,கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி ட்விட்டரில் பல அரசியல் மற்றும் திரை உலக பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில்,நடிகையும், பாஜக கட்சியைச் சேர்ந்தவருமான குஷ்பு தனது ட்விட்டரில் கருணாநிதி பிறந்த நாள் குறித்து வாழ்த்து கூறியதாவது:

“நான் ஒருநாள் கூட உங்களை உணராத நாளில்லை.எனக்கு ஒரு குருவாக கடவுளுக்கு மேல் இருந்தீர்கள்,மேலும்,நீங்கள் என் சிறந்த ஆசிரியராக இருந்தீர்கள். உங்கள் ஆசீர்வாதம் எப்போதும் என் மீது பொழியும் என்று நான் நம்புகிறேன். மிஸ் யூ அப்பா”,என்று பதிவிட்டிருந்தார்.இந்த பதிவானது தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node

குஷ்பு தனது அரசியலின் ஆரம்ப காலங்களில் திமுகவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.