கர்நாடகா காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏக்கள் ராஜினாமாக்களை ஏற்க மறுத்த சபாநாயகர்!

கர்நாடகா அரசியல் களம் தற்போது பரபரப்பாக இயங்கி வருகிறது. கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சார்ந்த எம்.எல்.ஏக்கள்

கர்நாடகா அரசியல் களம் தற்போது பரபரப்பாக இயங்கி வருகிறது. கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சார்ந்த எம்.எல்.ஏக்கள் 13  பேர் திடீரென தங்களது ராஜினாமாவை அளித்தனர்.

இந்த ராஜினாமாவை கடிதம் மூலம் சபாநாயகருக்கு தெரிவித்தனர். இதனை ஆராய்ந்த சபாநாயகர் இந்த ராஜினாமாக்களை ஏற்க மறுத்து விட்டார். ராஜினாமா செய்த சட்ட மன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து விசாரித்த பின்னரே முடிவு எட்டப்படும் என கூறப்படுகிறது.