கர்நாடக அரசியலில் நீடித்து வந்த அரசியல் குழப்பம் நேற்று முடிவுக்கு வந்தது. நான்கு நாட்களாக நடைபெற்று வந்த சட்டப்பேரவை விவாதங்களை தொடர்ந்து நேற்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி 6 மணிநேரம் கழித்து தான் வந்து இருந்தார். அவர் மிகவும் உருக்கமாக தனது உரையை நிகழ்த்தினார். இந்த அரசின் ஆட்சி ஆரம்பித்ததிலிருந்து பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வந்தது. எனது பதவியை விட்டு எப்போது வேண்டுமென்றாலும் […]
கர்நாடக சட்டசபை அரசியல் களம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கிவருகிறது. 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா , நம்பிக்கை வாக்கெடுப்பு, சட்டசபை அமளி என பரபரப்பாக இயங்கி வருகிறது. நேற்று கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்த்த நிலையில் அது நடக்காமல் போனது. இதனால் பாஜக எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டு, பின்னர் ஆளுநரிடம் புகார் அளித்தனர் இதில் ஆளுநர், சபாநாயகரிடம் இன்று மதியம் 1.30க்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கெடு விதித்து இருந்தார். […]
கர்நாடகா சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வுகள் களோபரமாக நடந்து வருகிறது. இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில் அவையில் பேச்சுவார்த்தை மட்டும் நடைபெற்றதால் பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர். பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இது குறித்து ஆளுநரிடம் புகார் தெரிவித்தனர். அதில், ‘ சபாநாயகர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் ஒருவருக்கொருவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். மேலும், சபாநாயகர் நேரம் கடத்துவதையே குறியாக வைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என குற்றம் சாட்டினார். இது தொடர்பாக ஆளுநர், சபாநாயகருக்கு, […]
கர்நாடகா அரசியல் களம் தற்போது பரபரப்பாக இயங்கி வருகிறது. கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சார்ந்த எம்.எல்.ஏக்கள் 13 பேர் திடீரென தங்களது ராஜினாமாவை அளித்தனர். இந்த ராஜினாமாவை கடிதம் மூலம் சபாநாயகருக்கு தெரிவித்தனர். இதனை ஆராய்ந்த சபாநாயகர் இந்த ராஜினாமாக்களை ஏற்க மறுத்து விட்டார். ராஜினாமா செய்த சட்ட மன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து விசாரித்த பின்னரே முடிவு எட்டப்படும் என கூறப்படுகிறது.