கமல்ஹாசனின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது -மருத்துவமனை அறிக்கை..!

கமல்ஹாசனின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கமல்ஹாசனின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும்  நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசனின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாகவும், அவரது மருத்துவ பரிசோதனை முடிவுகள் திருப்தி அளிக்கிறது என மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்கப் பயணத்தை முடிந்துவிட்டு நாடுதிரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து கமல் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று கமல்ஹாசன் கூறினார்.

unknown node