மத்திய பிரதேச பாஜக எம்பி ஜனார்தன் மிஸ்ரா , மத்திய பிரதேச மாநில பள்ளியில் கழிவறை சுத்தம் செய்த விடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பிரதமர் மோடி பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி முதல் ஆரம்பித்து, மஹாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதி வரையில் பாஜக இளைஞர் அணியினர், தூய்மை இயக்கத்தினை நடத்தி வருகின்றனர்.
அதன் படி , மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள கத்காரி பெண்கள் பள்ளிக்கு சென்று அங்கு மரக்கன்று நடும் விழா நடத்தினர். அந்த விழாவில் மத்திய பிரதேச மாநில எம்பி ஜனார்தன் மிஸ்ரா கலந்துகொண்டார்.
மரக்கன்று நட்ட பின்பு, பின்பு, அங்கிருந்த கழிவறை அசுத்தமாக இருந்த காரணத்தால், அதனை தனது கையாலேயே சுத்தம் செய்தார் எம்.பி ஜனார்தன் மிஸ்ரா. இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
unknown node