Madhya Pradesh: மத்தியப் பிரதேசத்தின் திண்டோரி மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை பிக்கப் வாகனம் கவிழ்ந்ததில் 8 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர் . காயமடைந்தவர்கள் ஷாபுரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். READ MORE- நாட்டை உலுக்கிய சந்தேஷ்காலி வழக்கு.. கைது செய்யப்பட்ட ஷேக் ஷாஜகான்..! இந்த பிக்கப் வாகனத்தில் சுமார் 45 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்து அதிகாலை 3 மணி முதல் 4 மணி அளவில் நடைபெற்றுள்ளது […]
5 மாநில தேர்தல் முடிந்து அதன் முடிவுகளும் கடந்த டிசம்பர் 3ஆம் தேதியே வெளியாகிவிட்டது. அதில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தெலுங்கானா மாநிலத்தின் முதல்வராக ரேவந்த் ரெட்டி அறிவிக்கப்பட்டு மாநில முதல்வராக பதவி ஏற்றுவிட்டார். மிசோரம் மாநிலத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் வெற்றி பெற்று லால்டுஹோமா முதலமைச்சராக பொறுப்பேற்று விட்டார். சத்தீஸ்கரில் புதிய முதல்வராக விஷ்ணுதியோ சாய் தேர்வு…! அதன் […]
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்று முடிந்த 5 மாநில தேர்தலில் சத்தீஸ்கர், ராஜஸ்தான் , மத்திய பிரதேசம் என 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. 5 மாநில தேர்தலில் ஒரே ஒரு மாநிலத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி தெலுங்கானா மாநில முதல்வர் யார் என உடனடியாக அறிவித்து நேற்று ரேவந்த் ரெட்டி தெலுங்கானா மாநில முதல்வராக பொறுப்பேற்று விட்டார். ஆனால் , 3 மாநில தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக இன்னும் […]
கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த டிசம்பர் 3 ஞாயிற்று கிழமை அன்று வெளியானது. அதில் காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த ராஜஸ்தான் , சத்தீஸ்கர் மாநிலம் மற்றும் பாஜக ஆட்சி புரிந்து வந்த மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. தெலுங்கானாவில் முதன் முதலாக காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. மிசோரமில், ஆளும் மிசோ தேசிய முன்னணி கட்சியை (MNF) பின்னுக்குத் தள்ளி, கடந்த முறை எதிர்கட்சியாக […]
கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் நேற்று 4 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என 3 மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. தற்போது 3 மாநிலங்களிலும் காங்கிரசை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்து இருந்தாலும், கடந்த முறை ஒரே ஒரு தொகுதியை வென்று இருந்த […]
12ஆம் வகுப்பு அரசு தேர்வில் 75 சதவீதம் மதிப்பெண்ணுக்கு அதிகமாக மதிப்பெண் எடுத்தால் மருத்துவம், பொறியியல், வழக்கறிஞர் படிக்க கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என மத்திய பிரதேச முதல்வர் அறிவித்தார். மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று ஓர் அசத்தலான அறிவிப்பை வெளியிட்டார். அதில், மத்திய பிரதேச மாநிலத்தில் , 12ஆம் வகுப்பு மாணவர்கள் 75 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் கல்வி கட்டணம் இலவசம் என அறிவித்துள்ளார். 12ஆம் வகுப்பு அரசு […]
மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், கடமையை சரியாக செய்யாததாக கூறி இரண்டு அரசு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அலட்சியமாக இருந்ததாகக் கூறி ஷிவ்புரியின் தலைமை முனிசிபல் அதிகாரி (CMO) ஷைலேஷ் அவஸ்தியையையும், பிச்சோரின் ஜூனியர் உணவு அதிகாரி நரேஷ் மஞ்சி ஆகியோரை சஸ்பெண்ட் செய்வதாக கூறினார். அவர் கூறுகையில், ‘ நல்ல பணி செய்யும் அதிகாரிகளை […]
மோடியை கொல்லுங்கள் என பேசிய குற்றத்திற்காக மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் முக்கிய தலைவர் ராஜா பட்டேரியா கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மூத்த காங்கிரஸ் தலைவரான ராஜா பட்டேரியா முன்னதாக அவர் பேசிய ஒரு வீடியோ வெளியாகி இருந்தது. அதில், மோடியை கொல்லவேண்டும் என பேசியுள்ளார். அதாவது, கொல்வது என்றால் மோடியை தேர்தலில் தோக்கடிப்பது என்றும் விளக்கம் அளித்து இருந்தார். அந்த வீடியோ தொடர்பாக பாஜகவினர் போலீசில் புகார் அளித்து இருந்தார். இந்த புகார் எப்.ஐ.ஆரை […]
லவ் ஜிகாத்-க்கு தடை சட்டம் மகாராஷ்டிராவில் இயற்றப்படும். – மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான். லவ் ஜிகாத் எனப்படுவது இஸ்லாமிய சமூக ஆணையோ, பெண்ணையோ இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்கையில் இஸ்லாமிய மதம் மாறி தான் திருமணம் செய்துகொள்ள முடியும் என்பது தான் லவ் ஜிகாத் எனப்படும் முறையாகும். இது குறித்து பேசிய மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மத மாற்றங்கள் என்பது எதோ ஒரு வகையில் தொடர்ந்து நடைபெற்று தான் […]
கையில் செருப்பு மாட்டிகொண்டு திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டு வந்த திருட்டு கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். ஒவ்வொரு திருட்டு கும்பலும் ஒவ்வொரு முறையில் திருட்டை நடத்தும். அப்படி ஒரே விதமாக திருட்டை செய்யும் கும்பல் என்றேனும் ஒருநாள் காவல்துறை வசம் அகப்பட்டு விடும். அப்படி தான் மத்திய பிரதேசத்தில் ஒரு திருட்டு கும்பல் அகப்பட்டுள்ளது. அதுவும் விசித்திரமான முறையில் திருடி மாட்டிக்கொண்டுள்ளனர். அதாவது , அவர்கள் திருட செல்கையில் காலில் செருப்பு போடுவதற்கு பதில், கையில் செருப்பு […]
மத்திய பிரதேச மாநிலம் மண்ட்லா நாட்டின் முதல் 100 சதேவீத எழுத்தறிவு பெற்ற பழங்குடி மாவட்டமாக மாறியுள்ளது பாஜக ஆட்சிபுரியும் மத்திய பிரதேச மாநிலத்தில் ஓர் பழங்குடியின மாவட்டம் 100 சதவீத எழுத்தறிவு பெற்றுள்ள முதல் பழங்குடியின மாவட்டமாக மாறியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டலா எனும் பழங்குடியின மாவட்டத்தில் அனைவரும் எழுத்தறிவு பெற்றுள்ளனர். இதனால், அம்மாவட்டம் 100 சதவீத எழுத்தறிவு பெற்ற முதல் பழங்குடியின மாவட்டமாக அறிவிக்கப்ட்டுள்ளது. பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மூலமாகவும் , […]
ம.பி.யில் புகையிலை வாங்கி வர மறுத்த 8 வயது பேத்தியை கொன்று உடலை தீவனக் குவியலில் புதைத்த தாத்தா கைது.. மத்திய பிரதேசத்தில் 60 வயது முதியவர் ஒருவர் தனது 8 வயது பேத்தியை கோடரியால் கொன்று அவரது உடலை மத்தியப் பிரதேசத்தின் குணா பகுதியில் உள்ள தீவனக் குவியலில் புதைத்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணையில், அருகில் உள்ள கடைக்கு சென்று புகையிலை வாங்கி வருமாறு, பல முறை கூறியும் பேத்தி […]
மத்திய பிரதேசத்தில் பள்ளிப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒரு மாணவர் உயிரிழப்பு மற்றும் 12பேர் காயமடைந்துள்ளனர். சாகர் மாவட்டத்தில் உள்ள சந்திரபூர் கிராமத்தில், தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரென்டென்ட் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர். விபத்தில் சிக்கிய மாணவர்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 2 […]
உத்திர பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, அசாம், மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட 8 மாநிலங்களில் பி.எஃப்.ஐ நிர்வாகிகள் வீடுகளில் மாநில காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். கடந்தவாரம் நாடுமுழுவதும் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ) , பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா மாற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில், நாடுமுழுவதும் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தமிழ்கத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பலர் எதிர்ப்பு […]
மத்திய பிரதேச பாஜக எம்பி ஜனார்தன் மிஸ்ரா , மத்திய பிரதேச மாநில பள்ளியில் கழிவறை சுத்தம் செய்த விடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பிரதமர் மோடி பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி முதல் ஆரம்பித்து, மஹாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதி வரையில் பாஜக இளைஞர் அணியினர், தூய்மை இயக்கத்தினை நடத்தி வருகின்றனர். அதன் படி , மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள கத்காரி பெண்கள் பள்ளிக்கு சென்று அங்கு மரக்கன்று நடும் […]
பிறந்தநாளை முன்னிட்டு மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற மகளிர் சுயஉதவி குழுக்கள் சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு , மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற மகளிர் குழு மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பிரதமர் திறன் மேம்பாட்டு பிரிவு சார்பாக, மத்திய பிரதேசத்தில் நலிவடைந்த குறிப்பிட்ட 4 பிரிவினருக்காக திறன் மேம்பாட்டு மையத்தை நேரடியாக துவங்கி வைத்தார். பின்னர் அங்கு நடைபெற்ற மகளிர் […]
மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் 70 வயதுடைய டாக்டர் ராஜ்குமார் மாத்தூரை ஒருவர் ராணுவ ஹவில்தார் போல் நடித்து ஏமாற்றியதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார். “குற்றம் சாட்டப்பட்டவர், தான் ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஹவில்தார் என்றும் தனது இளைய சகோதரருக்கு சிறுநீரகக் கற்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுவதாகக் கூறினார், அதற்கு அவருக்கு ₹ 60,000 தேவைப்பட்டது. இந்தத் தொகையை ஆன்லைனில் மாற்றுவது குறித்த உரையாடலின் மத்தியில், குற்றம் சாட்டப்பட்டவர் மருத்துவரின் கணக்கிலிருந்து ₹ 93,871 ஐப் பறித்துவிட்டார்” […]
மத்திய பிரதேசத்தில் நடந்து முடிந்த நகராட்சி கவுசின்சிலர் தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளர் மாரடைப்பால் மரணித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் 11 நகராட்சிகளுக்கு அண்மையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதில் ரேவா எனும் மாவட்டத்தில் ஹனுமனா நகரில் 9 வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டி நடந்தது. அதில் காங்கிரஸ் சார்பில் ஹரி நாராயண குப்தா என்பவர் போட்டியிட்டார். ஆனால் அந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அப்போது, காலை முதலே, உடல்நல குறைவால் இருந்துள்ளார். […]
மத்திய பிரதேசத்தில், பஞ்சாயத்து தேர்தலில் தோல்வியுற்ற நபர், வாக்காளர்களுக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு மிரட்டியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள நீச் மாவட்டத்தில் அண்மையில் பஞ்சாயத்து தேர்தல் நடந்துள்ளது. அதில் அந்த தேர்தலில் தோல்வியுற்ற நபர் வாக்காளர்களுக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். நீச் மாவட்டம் மானசா தாலுகாவில் தேவ்ரான் கிராமத்தில் அண்மையில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டி போட்ட வேட்பாளர் ராஜு தயாமா என்பவர் ஓட்டுக்கு பணம் கொடுத்துள்ளார். ஆனால், தேர்தலில் அவர் […]
மத்திய பிரதேச மாநிலத்தில் இடைநிலை கல்வி வாரியத்தின் சார்பில் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியது. இந்நிலையில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள குத்ருகாட் எனும் கிராமத்தில் வசித்து வரக்கூடிய மாணவி ரஜினி லில்ஹரே என்பவர் ஆங்கிலப் பாடத்தில் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய அந்த பெண் தனது உறவினரிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவாரே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொலைபேசியில் அவர் கிணற்றில் குதிக்கும் சத்தம் கேட்டதும் […]