காங்கிரஸ் ஆட்சியை விட குறைவுதான் – ஹெச்.ராஜா, பாஜக

BJP senior leader H Raja has said that petrol and diesel prices are lower than the Congress rule.

பெட்ரோல், டீசல் விலையேற்றம் என்பது காங்கிரஸ் ஆட்சியை விட குறைவுதான் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோல் விலை தினசரி அதிகரித்து வருகிறது. வாரிசுமையால் பெட்ரோல் விலை அதிகரித்து வருகிறது என்றும் இதற்கு மத்திய அரசுதான் காரணம் எனவும் எதிர்க்கட்சி குற்றசாட்டி வருகின்றனர். ஆனால், இவை எல்லாவற்றுக்கும் காரணம் முந்தைய காங்கிரஸ் ஆட்சி தான் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, பெட்ரோல், டீசல் விலையேற்றம் என்பது காங்கிரஸ் ஆட்சியை விட குறைவுதான் என்றும் உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் கூட காங்கிரஸ் ஆட்சியை விட குறைவுதான் எனவும் கூறியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் 3.9% ஆக இருந்த விலை ஏற்றம் பாஜக ஆட்சியில் 2.6% ஆக குறைந்துள்ளது என குறிப்பிட்டார்.