#Breaking:அதிர்ச்சி...இந்த பொருட்களில் ரசாயனம் கலப்பா? – ஆய்வு நடத்த தமிழக அரசு அதிரடி உத்தரவு!

Is the chemical mixed in the native sugar Government of Tamil Nadu ordered to conduct the inspection

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் விற்கப்படும் நாட்டுச் சர்க்கரை,பனங்கருப்பட்டி போன்றவற்றில் ரசாயனம் கலக்கப்படுகிறதா? என ஆய்வு நடத்த தமிழக அரசு உத்தரவு.

தமிழகத்தில் விற்பனை மற்றும் உற்பத்தி செய்யப்படும் நாட்டுச் சர்க்கரை,பனங்கருப்பட்டி,அச்சு வெல்லம் ஆகிய பொருட்களில் ரசாயனம் கலக்கப்படுகிறதா? என ஆய்வு நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இயற்கைப் பொருட்கள் என்ற பெயரில் ரசாயனம் கலக்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து,நாட்டுச் சர்க்கரை,பனங்கருப்பட்டி,அச்சு வெல்லம் ஆகியவற்றில் ரசாயனம் கலக்கப்படுகிறதா? என ஆய்வு நடத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு பிறப்பித்து,தமிழக அரசின் உணவுப்பாதுகாப்பு ஆணையர் செந்தில்குமார் ஐஏ.எஸ் ,சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.