நிபா வைரஸ் : கேரள மாநிலத்தில் 14 வயதான சிறுவன் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அங்கு நிபா வைரஸ் பரவல் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் மற்றும் குஜராத்தில் சண்டிபுரா வைரஸ் என மக்களை அச்சமடைய செய்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். நிபா வைரஸ் தாக்கிய 14 […]
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் விற்கப்படும் நாட்டுச் சர்க்கரை,பனங்கருப்பட்டி போன்றவற்றில் ரசாயனம் கலக்கப்படுகிறதா? என ஆய்வு நடத்த தமிழக அரசு உத்தரவு. தமிழகத்தில் விற்பனை மற்றும் உற்பத்தி செய்யப்படும் நாட்டுச் சர்க்கரை,பனங்கருப்பட்டி,அச்சு வெல்லம் ஆகிய பொருட்களில் ரசாயனம் கலக்கப்படுகிறதா? என ஆய்வு நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இயற்கைப் பொருட்கள் என்ற பெயரில் ரசாயனம் கலக்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து,நாட்டுச் சர்க்கரை,பனங்கருப்பட்டி,அச்சு வெல்லம் ஆகியவற்றில் ரசாயனம் கலக்கப்படுகிறதா? என ஆய்வு நடத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் […]
சென்னையிலுள்ள ரேஷன் கடைகளுக்கு நேற்று திடீரென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நியாயவிலைக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். சென்னை, ஆழ்வார்பேட்டை, நந்தனம் மற்றும் லாயிட்ஸ் காலனி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள 6 ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று மேற்பார்வையிட்டார். அப்போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்துள்ளார். அங்கு கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கொரோனா நிவாரணத்தொகையான 2000 ரூபாய் மற்றும் 14 அத்யாவசிய […]
கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான ஆந்திரா மாநிலத்தில் உள்ள சித்தூர் மற்றும் நாடு முழுவதும் உள்ள 40 க்கும் மேற்பட்ட கல்கி ஆசிரமத்தில் வருமான வரிதுறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அடுத்த தடா அருகே உள்ள வரதப்பாளையம் ஆசிரமத்தில் இன்று காலை சோதனை தொடங்கியது.இந்த ஆசிரமத்தை சென்னையைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் 30 வருடங்களாக நடத்தி வருகிறார்.
தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் நடைபெறும் பணிகள் குறித்து 4,000 நகரங்களில் ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்து, பிரபலங்களை தூதர்களாக நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது ‘‘நாடு முழுவதும் தூய்மைப்பணி குறித்த ஆய்வு ஜனவரி 4ல் தொடங்கி மார்ச் 10ம் தேதி வரை நடைபெறவுள்ளது. சுமார் 4 ஆயிரம் நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும்’’என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மக்கள் தொகை அதிகரிப்பால் குப்பைகளின் அளவும் அதிகரித்துள்ளது. மேலும் கழிப்பறைகளும் […]