அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு – அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் : அண்ணாமலை

பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்துவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்க வேண்டும் என அண்ணாமலை ட்விட்.

பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்துவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்க வேண்டும் என அண்ணாமலை ட்விட்.

சமீப நாட்களாக தமிழகத்தில் H1N1 இன்ஃப்ளுவன்சா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் ட்வீட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், ‘தமிழகத்தில் H1N1 இன்ஃப்ளுவன்சா வைரஸ் பரவல் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. சென்னையில் பல மருத்துவமனைகளில் காய்ச்சலுடன் சிகிச்சைக்காக வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

H1N1 இன்ஃப்ளுவன்சா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசு மருத்துவர்களின் உதவியோடு மாணவர்கள் எண்ணிக்கை அதிகமுள்ள பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்துவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுகஅரசு எடுக்க வேண்டும்.

H1N1 இன்ஃப்ளுவன்சா வைரஸ் பரவல் குறையும் வரை பொது இடங்களில் முகக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும். நோய் பரவலைத் தடுப்பதற்கு மக்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பை தர வேண்டுமென்று பாஜகசார்பாகப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node