நயன் – விக்கி வாடகைத்தாய் விவகாரம் தொடர்பாக விவரமான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளி மாணவர்களுக்கு 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் தொடர்ந்து மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. H1N1 வைரஸ் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் 300-க்கும் மேல் இருந்தது. தற்போது 30க்கும் கீழ் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என தெரிவித்தார். […]
H1N1 வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், குணமடைந்து வீடு திரும்பினார். தமிழக பல்லகிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தீவிர காய்ச்சல் காரணமாக சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில், H1N1 வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். ஓரிரு நாட்கள் தொடர் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி […]
அமைச்சர் அன்பில் மகேஸ் H1N1 காய்ச்சலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. தமிழக பல்லகிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தீவிர காய்ச்சல் காரணமாக சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சோதனை செய்தததில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுளளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் அன்பில் மகேஸ் H1N1 காய்ச்சலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குணமடைந்து இரண்டு நாட்களில் வீடு திரும்புவார். அமைச்சர் அன்பில் […]
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம். சமீப நாட்களாக தமிழகத்தில் H1N1 இன்ஃப்ளுவன்சா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசை அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில், இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழ்நாட்டில் தினசரி 200 புதிய தொற்று பாதிப்பு […]
அலட்சியம் காட்டாமல் 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தல். பள்ளிக் குழந்தைகள் உடல்நலனில் விளையாட வேண்டாம், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவியுங்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் மீண்டும் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில் சளிக்காய்ச்சல் உள்ளிட்ட பல வகையான காய்ச்சல்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நோய் பரவலைத் தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. 3 […]
H1N1 வைரஸ் காய்ச்சல் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இன்புளுயென்சா வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படும் நிலையில், காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், H1N1 வைரஸ் காய்ச்சல் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு […]
பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்துவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்க வேண்டும் என அண்ணாமலை ட்விட். சமீப நாட்களாக தமிழகத்தில் H1N1 இன்ஃப்ளுவன்சா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘தமிழகத்தில் H1N1 இன்ஃப்ளுவன்சா வைரஸ் பரவல் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. […]
காய்ச்சல், உடல் வலி, தலை வலி இருந்தால் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் இதுவரை 965 பேருக்கு இன்புளுயன்சா காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் நன்றாக இருக்கிறார்கள். இந்த காய்ச்சலால் இதுவரை 10 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லாததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான அவசியமில்லை. மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தால், அவர்களை வீடுகளுக்கு திருப்பி அனுப்ப […]
அனைத்து கிராமங்களிலும் மருத்துவ முகாம்களை தமிழக அரசு நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல். வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அனைத்து கிராமங்களிலும் மருத்துவ முகாம்களை தமிழக அரசு நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் எச்1என்1 சளிக்காய்ச்சல் உள்ளிட்ட பலவகையான காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகின்றன. நடப்பாண்டில் இந்த வகை காய்ச்சல்கள் குழந்தைகளையே அதிக அளவில் தாக்குவது […]
பருவ காய்ச்சலை தடுக்கும் வகையிலும் ,பன்றிகளில் உள்ள H1N1 வைரஸ் வகைகளால் உருவாகும் பன்றி காய்ச்சலை தடுக்கும் வகையில் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என டெல்லி மாநில சுகாதாரதுறைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது அம்மாநில அரசு. பன்றி காய்ச்சலின் அறிகுறிகளில் காய்ச்சல், இருமல், புண், தொண்டை, பலவீனம் மற்றும் உடல் வலிகள் ஆகியவை அடங்கும். குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வயதானவர்கள் ஆகியோரை இக்காய்ச்சல் உடனடியாக கடுமையான தொற்றும் அபாயம் உள்ளது. இந்த பன்றிக்காய்ச்சலுக்கு வழக்கமான சிகிச்சை ஓய்வு, […]