மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் ஐ.ஜே.கே, ச.ம.க. கூட்டணி பேச்சுவார்த்தை.!

Equality People's Party leader Sarath Kumar meets People's Justice Center party leader Kamal Haasan.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுடன் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சந்திப்பு.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை, சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி சந்தித்து, கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படுகிறது. சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் இந்திய ஜனநாயக கட்சி துணை பொதுச்செயலாளர் ரவி பாபுவும் மக்கள் நீதி மய்யம் கட்சியுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.

ஏற்கனவே, கமல்ஹாசனை சந்தித்து சரத்குமார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், மீண்டும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் சமத்துவ மக்கள் கட்சி சார்பாக நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், மக்கள் நீதி மய்யத்தில் கூட்டணி என்றும் கமல் தான் முதல்வர் வேட்பாளர் எனவும் அறிவித்திருந்தார். தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது அணியாக கமல்ஹாசன் அணியை கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.