அரசியல்வாதிகள் பேசிக் கொண்டிருந்தால் தான் உயிரோடு இருப்பதாக அர்த்தம் – அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

Minister OS Maniyan has said that there is no need to take TTV Dinakaran's statement that we will restore the AIADMK seriously.

அதிமுகவை மீட்டெடுப்போம் என டிடிவி தினகரன் கூறுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அதிமுகவை கைப்பற்றுவோம் என டிடிவி தினகரன் பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அரசியல்வாதிகள் பேசிக் கொண்டிருந்தால் தான் உயிரோடு இருப்பதாக அர்த்தம் எனவும் கூறியுள்ளார். டிடிவி தினகரனின் பேச்சும் அப்படித்தான் என்று அமைச்சர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சசிகலா நான்கு ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு வெளியே வந்தது முதல் ஜனநாயக முறையில் அதிமுகவை மீட்டெடுப்போம் என்று அதிமுகவில் ஸ்லீப்பர் செல் ஆக இருக்கிறார்கள் எனவும் டிடிவி தினகரன் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். ஆனால், இதுவரை அதிமுகவில் இருந்து இன்னும் ஒருவர் கூட அமமுக பக்கம் வந்ததாக தெரியவில்லை. சசிகலா மற்றும் டிடிவி தினகரனை ஒருபோதும் அதிமுகவில் இணைக்க முடியாது என்று முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.

அரசியல்வாதிகள் பேசிக் கொண்டிருந்தால் தான் உயிரோடு இருப்பதாக அர்த்தம் – அமைச்சர் ஓ.எஸ்.மணியன்