மழை வந்தால் திமுகவின் சாயம் வெளுத்து விடும் – ஜெயக்குமார்

திமுக 95 சதவீதம் மழை நீர் வடிகால் பணிகளை முடித்து விட்டதாக பொய் சொல்கிறது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

திமுக 95 சதவீதம் மழை நீர் வடிகால் பணிகளை முடித்து விட்டதாக பொய் சொல்கிறது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் பேசுகையில், ஓபிஎஸ்க்கு சட்டப்பேரவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் சபாநாயகர் இடம் வழங்கக் கூடாது. நான் சபாநாயகராக இருந்தால் நிச்சயம் இடம் வழங்க மாட்டேன்.

திமுக 95 சதவீதம் மழை நீர் வடிகால் பணிகளை முடித்து விட்டதாக பொய் சொல்கிறது. போர்க்கால அடிப்படையில் பணிகளை முடித்திருக்க வேண்டும். எங்கள் ஆட்சியை பொறுத்த வரையில் work more, talk less ஆனால் இந்த ஆட்சியில் talk more work less இதுதான் இந்த ஆட்சி.

இந்த ஆட்சியில் லேபிள் ஒட்டும் பணியை மட்டும் தான் செய்து வருகிறார்கள். நாங்கள் அடிக்கல் நாட்டி முடித்த பணியை தொடங்கி வைப்பார்கள் இது தான் திமுகவின் வேலை. மழை வந்தால் திமுகவின் சாயம் வெளுத்து விடும். 2024 ல் ஜெயலலிதாவின் ஆட்சி அமையும் என தெரிவித்துள்ளார்.