எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை போல் ஆட்சியை வழி நடத்துவேன் – சசிகலா!

The audio of Sasikala saying that I will lead the regime like MGR and Jayalalithaa has been released.

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை போலவே நானும் ஆட்சியை வழிநடத்துவேன் என சசிகலா பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே சசிகலாவுடன் அதிமுக நிர்வாகிகள் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தற்பொழுதும் தேனியை சேர்ந்த அதிமுக நிர்வாகி கர்ணன் என்பவருடன் சசிகலா பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.

இதில், ஜெயலலிதாவை அவரது தாயை விட அதிக நாட்கள் நான் பராமரித்தது எனது பாக்கியம் என கூறிய சசிகலா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் காலத்தில் அதிமுக எப்படி இருந்ததோ அப்படி தானும் கட்சியை வழிநடத்துவேன் எனவும்  கூறியுள்ளார். மேலும், பெங்களூரு சிறைக்கு செல்வதற்கு முன்பதாக சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து ஆட்சியை முறையாக தான் அமைத்து கொடுத்து விட்டு சென்றதாகவும் கூறியுள்ளார்.