விவசாயிகளிடம் நான் மன்னிப்பு கோருகிறேன்- பிரதமர் மோடி..!

விவசாயிகளிடம் நான் மன்னிப்பு கோருகிறேன் என பிரதமர் மோடிஅறிவித்துள்ளார்.

விவசாயிகளிடம் நான் மன்னிப்பு கோருகிறேன் என பிரதமர் மோடிஅறிவித்துள்ளார்.

பிரதமர் மோடி காலை 9 மணிக்கு தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாகவும் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுகிறது என தெரிவித்தார்.

புதிய வேளாண் சட்டங்கள் குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும். அதில் மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள், வேளாண் வல்லுனர்கள் இடம்பெறுவர் என தெரிவித்தார். மேலும்விவசாயிகளின் நலனுக்காகவே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன; ஆனால், எங்களால் விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியவில்லை. விவசாயிகளிடம்நான்மன்னிப்புகோருகிறேன். போராட்டம் செய்து வரும் விவசாயிகள் வீடுகளுக்கு செல்லுமாறு பிரதமர்மோடிஅறிவுறுத்தல்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளிடம் நான் மன்னிப்பு கோருகிறேன்- பிரதமர் மோடி..!