மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக சமீபத்தில் பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி, டெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்கடந்த திங்கள் கிழமை காலை தொடங்கியது. இந்தக் குளிர்காலக் கூட்டத்தொடரானது டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய முதல்நாளே மக்களவை, மாநிலங்களவையில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வழிவகுக்கும் மசோதா […]
விவசாயிகளிடம் நான் மன்னிப்பு கோருகிறேன் என பிரதமர் மோடிஅறிவித்துள்ளார். பிரதமர் மோடி காலை 9 மணிக்கு தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாகவும் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுகிறது என தெரிவித்தார். புதிய வேளாண் சட்டங்கள் குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும். அதில் மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள், வேளாண் வல்லுனர்கள் இடம்பெறுவர் என தெரிவித்தார். மேலும் […]
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் போராடிய காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பி, போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. 2020-21-ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். இதன் பின் அவை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி ராகுல்காந்தி தலைமையில் டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி நாடாளுமன்ற […]
வேளாண் சட்டங்களுக்கு பல திருத்தங்கள் தேவை என்று ஹரியானா துணை முதல்வர் கூறுகிறார். புதிய மத்திய வேளாண் சட்டங்களுக்கு பல திருத்தங்கள் தேவை என்றும், எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுக்கு உறுதியான ஆலோசனைகளை வழங்குமாறு ஹரியானாதுணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா இன்று தெரிவித்தார். ஹரியானாவில் உள்ள விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்.எஸ்.பி) உறுதிப்படுத்த முடியவில்லை என்று நினைக்கும் நாளில் தனது ராஜினாமாவை வழங்குவதாக ஜன்னாயக் ஜந்தா கட்சி (ஜே.ஜே.பி) தலைவர் மீண்டும் வலியுறுத்தினார். இன்று செய்தியாளர் மத்தியில் […]
மகாராஷ்டிராவில் வேளாண் சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சி நாளை பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது. அண்மையில் வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன. இது தொடர்பாக, எதிர்ப்புத் தெரிவித்து நாளை மாலை 4 மணிக்கு மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் விவசாயிகளை காப்பாற்ற பேரணிகள் நடத்த அம்மாநில காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இந்த பேரணியானது, மகாராஷ்டிரா மாநிலத்தின் […]