தந்தை ஒரு கட்சியிலும், மகன் ஒரு கட்சியிலும் எப்படி? – கேஎஸ் அழகிரி

KS Alagiri said that our aim is to prevent the power of Delhi from flying the flag in Tamil Nadu.

டெல்லியின் அதிகாரம் தமிழகத்தில் கொடிகட்டி பறப்பதை தடுப்பதே எங்களின் நோக்கம் என்று கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

கட்சி தலைவர்களின் பிள்ளைகள், அவர்கள் குடும்பம் சார்ந்த கட்சியில் இருப்பது தான் லாஜிக் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார். தந்தை ஒரு கட்சியிலும், மகன் ஒரு கட்சியிலும் இருப்பது சாத்தியமற்றது என்று வாரிசு அரசியல் குறித்த கேள்விக்கு விளக்கமளித்துள்ளார். மேலும், டெல்லியின் அதிகாரம் தமிழகத்தில் கொடிகட்டி பறப்பதை தடுப்பதே எங்களின் நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.