சிறப்பான தொடக்கம்., நாளைக்குள் அனைத்தும் முடிந்துவிடும் – ஐ.ஜே.கே., ச.ம.க.

The IJK and the Smk have said that the alliance and the division of constituencies will be completed by tomorrow.

நாளைக்குள் கூட்டணி, தொகுதி பங்கீடு என அனைத்தும் நிறைவடைத்துவிடும் என ஐ.ஜே.கே., ச.ம.க. கூட்டாக பேட்டி.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனுடன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயக கட்சி துணை பொதுச்செயலாளர் ரவி பச்சமுத்து மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது கூட்டணியில் தொகுதி பங்கீடு, தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இதன்பின், ஐ.ஜே.கே துணை பொதுச்செயலாளர் ரவி பச்சமுத்து, ச.ம.க. தலைவர் சரத்குமார் கூட்டாக சேர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினர். அப்போது, எங்கள் கருத்தினை பரிமாறிக் கொண்டியிருக்கிறோம். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டியிருக்கிறோம். எதற்கும் ஒரு தொடக்கம் தேவை, இந்த தொடக்கம் சிறப்பான தொடக்கமாக அமையும் என்று ரவி பச்சமுத்து கூறினார்.

இவரைத்தொடர்ந்து பேசிய சரத்குமார், சிறந்த கூட்டணியை அமைப்பதற்கும், இந்த தேர்தலை சந்தித்து ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் பயணித்து கொண்டியிருக்கிறோம். மாற்றம் தரும் கூட்டணி அமைந்துள்ளது. நாளைக்குள் கூட்டணி, தொகுதி பங்கீடு என அனைத்தும் நிறைவடைத்துவிடும் என்ற நம்பிக்கை எல்லாரிடமும் உள்ளது என தெரிவித்துள்ளார்.

சிறப்பான தொடக்கம்., நாளைக்குள் அனைத்தும் முடிந்துவிடும் – ஐ.ஜே.கே., ச.ம.க.