#Breaking:மழை பாதிப்பு – முதல்வரை தொலைபேசியில் அழைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

Governor RN Ravi had a telephone conversation with Chief Minister Stalin about the impact of the rains.

சென்னை:மழை பாதிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்துரையாடினார் என்று ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக,சென்னையின் பல்வேறு பகுதிகளில் வீடுகள்,கடைகள், சாலைகள் என மழைநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,மழை பாதிப்பு மற்றும் நிவாரணப்பணிகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்துரையாடினார் என்று ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.