ஆளுநர் ரவியை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், தமிழக அரசால் இயற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படாமல் இருப்பதற்கு அரசியல் பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் செயல்படும் ஆளுநர் ரவியை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில், மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்கள் கலந்து கொண்டுள்ளார்.