தமிழக அரசு இந்த குடும்பத்திற்கு ரூ.1 கோடி ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும் – எச்.ராஜா

தற்கொலை செய்துகொண்ட மாணவி லாவண்யா குடும்பத்திற்கு, தமிழக அரசு அந்த குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும் என எச்.ராஜா ட்வீட்.

தற்கொலை செய்துகொண்ட மாணவி லாவண்யா குடும்பத்திற்கு, தமிழக அரசு அந்த குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும் என எச்.ராஜா ட்வீட்.

தஞ்சாவூர் அருகே 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி லாவண்யா மற்றும் அவரது பெற்றோரை, கடந்த 2 ஆண்டுகளாக சிரியர் ராக்லின் மேரி விடுதி வார்டன் சகாயமேரி ஆகியோர் மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதாகவும், பள்ளியில் புல் வெட்டுதல் கழிவறை சுத்தம் செய்யும் பணியை செய்ய மாணவியை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மனைவி லாவண்யா விஷமருந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மதமாற மறுத்ததால் கழிவறை கழுவ கடுமையான பணிகள் செய்ய உததரவிடப்பட்டு துன்புறுத்தலின் காரணமாக தற்கொலைக்கு ஆளான லாவண்யாவிற்கு நியாயம் கிடைக்க வேண்டும். தமிழக அரசு அந்த குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node