அரசு பங்களாவில் தொடர்ந்து தங்க ஈபிஎஸ்-க்கு அரசு அனுமதி..!

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சமீபத்தில் தமிழக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் புதிதாக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு  அரசு பங்களாக்கள் ஒதுக்கீடு செய்யும் பணியில் தமிழக பொதுப்பணித்துறை ஈடுப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தமிழக முன்னாள் முதலமைச்சரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி 2011-ஆம் ஆண்டு முதல் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் தங்கி வந்த நிலையில், தொடர்ந்து தங்க அனுமதி அளிக்ககோரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பங்களாவில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தங்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைப்பார் ஓ. பன்னீர்செல்வம் தனது தம்பி மறைவால் முழுமையாக காலி செய்ய அவகாசம் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு பங்களாவில் தொடர்ந்து தங்க ஈபிஎஸ்-க்கு அரசு அனுமதி..!