கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமிக்கு முழு ஆதரவு – ஜி.கே.வாசன் அறிவிப்பு

Tamil Maanila Congress who is in the AIADMK alliance, has accepted incumbent Chief Minister Palanisamy as its chief ministerial candidate.

அதிமுக கூட்டணியில் உள்ள தமாகா ,தற்போதைய முதலமைச்சர் பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டுள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி அதிகாரபூர்வமாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.நீண்ட நாட்களாக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து முடிவு எடுப்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில் பல கட்ட ஆலோசனைக்கு பின்னர் பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இதனிடையே அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும். தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்தாலும் அதை பாஜக தான் அறிவிக்கும் என்று கூறினார்.முருகனை தொடர்ந்து பாஜகவின் தலைவர்களான  வானதி சீனிவாசன்,அண்ணாமலை,ஹெச்.ராஜா உள்ளிட்டோர் இதே கருத்தை கூறி வருகின்றனர்.ஏற்கனவே அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களது பேச்சுக்கள் அதிமுக -பாஜக கூட்டணி இடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு அதிமுகவினரும் பதில் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள தமாகா ,தற்போதைய முதலமைச்சர் பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டுள்ளது.இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கவுள்ளோம்.கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடிபழனிசாமி அவர்களுக்கு முழுஆதரவு அளிக்கிறோம்.தமாகா எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டது என்று தெரிவித்துள்ளார்.

unknown node