75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை வீடுதோறும் மூவர்ண கொடியை பறக்கவிட வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள்.
வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்தியாவின் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் சுதந்திர தினத்தை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நாடுமுழுவதும் நடைபெற உள்ளது.
75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக அசாதி கா அம்ரித் மோட்சாவ் என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த ஆண்டு அசாதி கா அம்ரித் மோட்சாவ் என்ற பெயரில் நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஒவ்வொரு வீடுகளிலும் தேசிய கொடி இயக்கம் மூலம் மேலும் வலுப்படுத்துவோம். ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி வரை உங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றுங்கள். இந்த இயக்கம் தேசிய கொடியின் நமது இணைப்பை மேலும் அதிகரிக்கும்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node