நாளை முதல் சுந்தந்திர தினம் வரையில் சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் கிராமிய இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வரும் திங்கள்கிழமை நாடு முழுவதும் 75வது சுந்தந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நாடுமுழுவதும் தீவிரமாக அந்தந்த மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் கிராமிய காலை நிகழ்ச்சிகளை நடந்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, நாளை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திலும், […]
அனைத்து மக்களின் வாழ்விட உரிமையை பாதுகாக்க கிராம சபைகள் உறுதியேற்க செய்திட வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் ட்வீட். சுதந்திரத்தின் பவள விழாவை ஒட்டி நடைபெறவுள்ள கிராம சபை கூட்டங்களில் விவாதிக்க வேண்டிய பொருள்களின் பட்டியலை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்கக ஆணையர் சுற்றறிக்கையில் அனுப்பியுள்ளார். அதில், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து கே.பாலகிருஷ்ணன் ட்விட் செய்துள்ளார். சுதந்திரத்தின் பவள விழாவை ஒட்டி நடைபெறவுள்ள […]
பட்டியலின பெண் ஊராட்சி மன்றத் தலைவருக்கு தேசியக் கொடியேற்ற பாதுகாப்பளிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டைக் கொண்டாடும் வேளையில் பட்டியலின பெண் ஊராட்சித் தலைவர் ஒருவர் தேசியக்கொடியேற்ற பாதுகாப்பு கோரி காவல்துறைக்குக் கடிதம் எழுதிய விவகாரம் அதிர்ச்சியளிக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம், எடுத்தவாய்நத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் சுதா வரதராஜி, டிஎஸ்பி-க்கு எழுதிய கடிதத்தில், பட்டியலின வகுப்பைச் சேர்ந்த ஊராட்சித் தலைவரான தான், தீண்டாமை […]
சுதந்திரத்திற்குப் பிறகு 1947 ஆம் ஆண்டு முதல் நம் நாட்டில் ஏற்பட்ட உள் எல்லைகள் மாற்றத்தால், இந்த 75 ஆண்டுகளில் இந்தியாவின் வரைபடத்தில் பல மாறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2019 இல் ஜம்மு மற்றும் காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இரண்டு புதிய யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. மேலும் பல பகுதிகள் இன்னும் தங்களது முழு மாநில அந்தஸ்தை விரும்புகின்றன. 1947 – 1949 1961ல் கோவா, 1962ல் பாண்டிச்சேரி, 1975ல் சிக்கிம் ஆகிய மாநிலங்கள் இந்திய யூனியனுடன் […]
75-வது சுதந்திர தின விழா 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி பிரிட்டிஷ் அரசிடமிருந்து இந்தியா விடுதலை அடைந்தது. நம் முன்னோர்கள் நாட்டிற்காக பல தியாகங்கள் செய்து கிடைத்ததுதான் இந்த சுதந்திரம். நம் முன்னோர்களை போற்றும் வகையில் இத்தினத்தை நாம் அவசியம் கொண்டாட வேண்டும். வரும் ஆகஸ்ட்15-ம் தேதி இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தேசத்தந்தை மகாத்மா காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவரான மகாத்மா […]
1950 இல் அரசியலமைப்பு இயற்றப்பட்ட பிறகு, சமூகத்தின் மாறிவரும் அம்சங்களுக்கு ஏற்ப சட்டத்தை கொண்டு வருவதற்காக காலப்போக்கில் ஏராளமான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அச்சட்டங்களை என்ன, எப்போது இயற்றப்பட்டது என்பதை பற்றி காண்போம். வகுப்புகளின்படி மாநிலங்களை ஒழித்தல் மற்றும் யூனியன் பிரதேசங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் மொழி வாரியாக மாநிலங்களை மறுசீரமைத்தல் (1956) இந்தத் திருத்தம் அந்த பிரதேசங்களில் பேசப்படும் மொழிகள் தொடர்பாக மாநிலங்களை ஒழுங்குபடுத்தியது. இந்த முறையான ஏற்பாடு மாநிலங்களின் சிக்கலான தன்மையை மேலும் குறைத்தது. வாக்களிக்கும் வயது […]
சுதந்திரப் போராட்டம் தங்கள் இறுதி மூச்சு வரை போராடிய ஆயிரக்கணக்கான வீரர்களின் கதைகளால் நிரம்பியுள்ளது. ஆண் போர்வீரர்களுக்கு உரிய இடம் கொடுக்கப்பட்டாலும், பெண் போர்வீரர்களுக்கு நீண்ட காலமாக அதே இடம் மறுக்கப்பட்டுள்ளது. இன்றைய தலைமுறையினருக்கு நம் நாட்டு சுதந்திரத்தில் பெண் போராளிகளின் பங்கு பற்றி அவ்வளவாக தெரிய வாய்ப்பில்லை. “போர்” மற்றும் “வீரர்” என்ற சொற்கள் பெரும்பாலும் ஆண்களுடன் தொடர்புடையவை என்றாலும், இந்திய வரலாற்றில் பல பெண்கள், ஆண்களைப் போலவே பெண்களும் வலிமையானவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். […]
75-வது சுதந்திர தினவிழா முன்னிட்டு, உயர்கல்வி நிறுவனங்களுக்கு UGC புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், 75-வது சுதந்திர தினவிழா முன்னிட்டு, உயர்கல்வி நிறுவனங்களுக்கு UGC புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி,75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு, தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக #harghartiranga ஹேஷ்டேகில் பதிவுகள் இட வேண்டும் மாணவர்கள், பேராசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கிட நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு […]
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை வீடுதோறும் மூவர்ண கொடியை பறக்கவிட வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள். வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்தியாவின் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் சுதந்திர தினத்தை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நாடுமுழுவதும் நடைபெற உள்ளது. 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக அசாதி கா அம்ரித் மோட்சாவ் என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு […]
விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இன்று இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா மிகவும் சிறப்பாக, கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திறந்த ஜீப்பில் நின்றவாறு காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பின், 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, முதல்முறையாக சென்னை கோட்டையில் தேசிய கோடியை ஏற்றினார்.அதன்பின் மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் […]
டெல்லி செங்கோட்டையில் தேசிய கோடியை ஏற்றிய பிரதமர் மோடி. இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, முதலில் மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். பின், பிரதமருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, டெல்லி செங்கோட்டையில் மூவர்ண தேசிய கோடியை ஏற்றினார். பிரதமர் மோடிக்கு தேசிய கோடியை ஏற்றி வைத்த பிறகு ஹெலிகாப்டரிலிருந்து மலர்கள் தூவப்பட்டன. டெல்லி சுதந்திர தின விழாவில் தலைவர்கள், முப்படைத் தளபதிகள், மத்திய […]
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த வருடம் 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. சுதந்திரத்தினவிழா 1947 ஆகஸ்ட் 15-ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து, விடுதலை அடைந்து தனி நாடானதை கொண்டாடும் வகையில், சுதந்திரத்தினவிழா கொண்டாடப்படுகிறது. நாட்டிற்காக போராடிய மற்றும் உயிர் தியாகம் செய்தவர்களை நினைவு கூறவும் மற்றும் 200 ஆண்டுகளாக ஆங்கிலேயர்களிடம் அடிமைப் பட்டிருந்த நம் நாடு விடுதலை அடைந்ததை கொண்டாடும் வகையிலும் சுதந்திர தினவிழா கொண்டாடப்படிங்கிறது. இந்த […]
சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சென்னையில் அணிவகுப்பு ஒத்திகை. வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், தமிழகத்தை பொறுத்தவரையில், கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மிகவும் எளிய முறையில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. அந்த வகையில், இந்த ஆண்டு தமிழகத்தின் நோய் தொற்றின் தீவிரம் குறைந்துள்ள நிலையில், சுதந்திர தினவிழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, சென்னையில் சுதந்திர தினவிழாவுக்காக, ராஜாஜி சாலையில், சுதந்திர தினவிழா ஒத்திகை […]
சென்னை காமராஜர் சாலையில் 1.83 கோடியில் நினைவு தூண் அமைக்கப்படுகிறது. இந்திய நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை நினைவுபடுத்தும் விதமாக சென்னை காமராஜர் சாலையில் 1.83 கோடியில் நினைவு தூண் கட்டப்படுகிறது. நினைவுத் தூண் கட்டப்படுவதற்கான டெண்டர் அறிவிப்பை பொதுப்பணித்துறை வெளியிட்டது. இந்த நினைவு தூண் ஒரு மாதத்திற்குள் கட்டப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.