அரசு பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு 2 மாதத்திற்கு ஒருமுறை இலவச சானிட்டரி நாப்கின் – ஆந்திர அரசு!

The Andhra Pradesh government has introduced a scheme to provide free sanitary napkins every 2 months to students studying in government schools and colleges.

அரசு பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு 2 மாதத்திற்கு ஒருமுறை இலவச சானிட்டரி நாப்கின் வழங்கு திட்டத்தை ஆந்திர அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் தலைமையிலான ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள பெண்கள், முதியவர்கள் மற்றும் மக்களுக்கு அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவ்வப்போது பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து வருகிறார்கள்.

தற்பொழுதும் ஆந்திர மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி, கல்லூரிகளில் படிக்கக்கூடிய மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை இன்று முதல்வர் அலுவலகத்தில் வைத்து தொடங்கி வைத்துள்ளார். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், பெண்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவிகளின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு மாநில அரசு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளதாக கூறியுள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் இடைநிலைகள் கல்லூரிகளில் படிக்கக்கூடிய சுமார் 10 லட்சம் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் பத்து சானிடரி நாப்கின்கள் வீதம்  வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மாதவிடாய் காலத்தில் மாணவிகள் பள்ளிக்கு விடுப்பு எடுப்பதை குறைக்கும் விதமாகவும், மாணவிகளின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்திற்கும் முன்னுரிமை அளிக்கும் விதமாகவும் தான் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும், மாநிலம் முழுவதும் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு 2 மாதங்களுக்கு ஒரு முறை இந்த நாப்கின்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.