"தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 3 வேளை இலவச உணவு"- அமைச்சர் சேகர் பாபு..!

Free food will be provided 3 times a day in all government hospitals in Tamil Nadu "- Minister Sekar Babu ..!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 3 வேளை இலவச உணவு கொடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று மிகத் தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில் மே 10 முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும்,கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மருத்துவமனை பணியாளர்கள், நோயாளிகளுக்கு தரமான உணவு 24 மணி நேரமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி,சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெரும் உள்நோயாளிகளுக்கு 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி,ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு இலவச உணவு வழங்கும் சேவையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து,அமைச்சர் சேகர் பாபு,செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,”ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள இந்த சேவையைப் போன்று,தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டம் மிக விரைவில் தொடங்கப்படும்”,என்று கூறினார்.