தமிழக சட்டப்பேரவை நான்கு நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் கூடும் நிலையில்,இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.அதன்படி எதிர்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர் சேகர்பாபு மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் பதிலளித்து,பின்னர்,புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளனர். மேலும்,2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரி(திருத்த) சட்ட முன்வடிவு வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்களால் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.குமரியில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு நவீன படகுகள் வாங்குவது குறித்து […]
தமிழகத்தை சார்ந்த யாத்ரீகள் மானியம் பெற விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது. 2021-2022 ஆம் நிதியாண்டில் சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய திருத்தலங்களுக்கு புனித யாத்திரை மேற்கொண்டு யாத்திரையை முழுமையாக நிறைவு செய்த, தமிழ்நாட்டை சேர்ந்த யாத்ரீகள் மானியம் பெற விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அறிவிப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது: “2021-2022 ஆம் நிதியாண்டில் சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள […]
தமிழகத்தில் உள்ள முக்கிய திருக்கோயில்களில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமிராக்களில் உள்ள குறைபாடுகளை 3 தினங்களுக்குள் சரிசெய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவு. இந்து சமய அறநிலையத்துறை ஒருங்கிணைந்த திருக்கோயில் மேலாண்மை திட்ட செயலாக்கத்தின் ஒருபகுதியாக தமிழகத்தில் உள்ள முக்கிய திருக்கோயில்களின் அன்றாட நிகழ்வுகளை கண்காணிப்பு கேமராக்கள் வழியாக நேரலையாக கண்காணித்திட ஆணையர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டு 20.01.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அதன்படி,கட்டுப்பாட்டு அறை பணிகள் நாள்தோறும் சிறப்பாக […]
அண்ணா நினைவு நாளையொட்டி இன்று வழிபாடு மற்றும் பொது விருந்துக்கு அனுமதி இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அண்ணா நினைவு நாளையொட்டி இன்று வழிபாடு மற்றும் பொது விருந்து அனுமதி இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பில்,தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரேகட்டமாக நடைபெற உள்ளது.இதனால் கடந்த 26-ஆம் தேதி முதல் […]
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 3 வேளை இலவச உணவு கொடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று மிகத் தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில் மே 10 முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும்,கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மருத்துவமனை பணியாளர்கள், நோயாளிகளுக்கு தரமான உணவு 24 மணி நேரமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் […]