சென்னை : அண்மையில் வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் கடந்த டிசம்பர் 1ஆம் தேதியன்று திருவண்ணாமலையின் தீப மலை அடிவாரத்தில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 5 குழந்தைகள் உட்பட 7பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை அடுத்து திருவண்ணாமலை தீப திருவிழா இந்த வருடம் வழக்கம் போல நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வரும் சூழலில், கடந்த டிசம்பர் 3ஆம் தேதி வழக்கம் போல திருக்கார்த்திகை தீப […]
திண்டுக்கல்: தமிழக அறநிலையத்துறை சார்பில் வரும் ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தினங்களில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள, முருகரை பற்றி ஆய்வு கட்டுரைகள் எழுதி அனுப்ப muthamizhmuruganmaanadu2024.com எனும் இணையதளத்தில் பதிவு செய்ய முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், முருகன் மாநாடு பற்றியும், அதற்கான முன்னேற்பாடுகள், ஆய்வு கட்டுரைகள், விருதுகள் பற்றியும் அமைச்சர் சேகர்பாபு இன்று சென்னையில் செய்தியாளர்கள் […]
Election2024 : முதல்வர் எங்களை அடக்கி வாசிக்க சொன்னதன் காரணமாக தான் அண்ணாமலை போன்றோர் பேசி கொண்டு இருக்கிறார்கள். – சேகர்பாபு. இணையத்தின் வாயிலாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய பிரதமர் மோடி, நமோ செயலியில் பேசுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிகமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் ஊழல் இருப்பது கவலையாக உள்ளது. தமிழகத்தை பாஜக புரட்டி போடவுள்ளது. தமிழகத்தில் ஆளும் கட்சி மீதுள்ள கோபம் தேர்தலின் போது வெளிப்படும் என பிரதமர் மோடி அதில் கூறியிருந்தார். […]
இன்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் நாள் கூட்டம் காலையில் தொடங்கியது. அப்போது பல்வேறு துறை அமைச்சர்கள், உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்தனர். அப்போது அறநிலையத்துறை குறித்து உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதாவது கோயில் காணிக்கையாக செலுத்தப்படும் நகைகள் உருக்குதல் பற்றிய விவரங்கள் கேட்டிருந்தார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் : கலைஞர் பெயர் வைத்தது தான் ஒரே காரணம்.! சேகர்பாபு பரபரப்பு… அதற்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார். அவர் கூறுகையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் […]
சென்னையில் பேருந்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு சென்னை புறநகர் பகுதியில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இதற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வர தாமதமாவதால் பயணிகள் அவதிக்கு உள்ளாவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றசாட்டை முன்வைத்து வருகின்றனர். இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து குற்றசாட்டுகளை முன்வைத்தனர். அந்த கேள்விக்கு அமைச்சர் சேகர் பாபு விரிவான விளக்கத்தை அளித்தார். அப்போது […]
சென்னை புறநகர் பகுதியில் புதியதாக திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இன்று புதிய காவல் நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டிருந்தார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அடுத்தடுத்து செயல்படுத்தப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை கூறினார். அவர் கூறுகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதியதாக மலிவு விலையில் தரமான உணவகங்கள் அமைக்க அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். […]
மத்திய அரசு மத, இன ரீதியான குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு அரசு மீது சுமத்த பார்க்கிறது என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குற்றசாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது, அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை வைத்து இன, மத பிரச்னைகளை ஏற்படுத்தி தமிழ்நாட்டின் அமைதிய சீர்குலைத்து கலவரத்தை உண்டாக்க நினைத்தவர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். மத, இன ரீதியான குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு அரசு மீது மத்திய அரசு சுமத்த பார்க்கிறது. உரிய அனுமதி எதுவும் பெறாமல் […]
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். இந்த வருடம் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் ஆரம்ப நாட்களில் பக்த்ர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்ததாலும், சாமி தரிசனம் செய்யாமல் பலர் சன்னிதானத்தில் இருந்ததாலும் கூட்ட நெரிசல் மிக அதிகமாக இருந்தது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழகத்தில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் செல்வதால் […]
தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி அப்பகுதிகள் முழுவதையும் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் இரு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு கனமழையால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இந்த வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட புதுச்சேரி துணைநிலை ஆணையர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி வந்திருந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் […]
சென்னை முக்கிய பேருந்து நிலையமாக கோயம்பேடு பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. தாம்பரம், பெருங்குளத்தூர் ஆகிய இடங்களிலும் பேருந்து முனையங்கள் செயல்பட்டு வருகின்றன. இருந்தும் கோயம்பேடு பேருந்து நிலையம் போல பிரமாண்ட பேருந்து நிலையம் சென்னையில் இல்லாமல் இருந்து வந்தது. இதனை ஈடுசெய்ய, சென்னை பேருந்து போக்குவரத்து சிரமத்தை குறைக்கும் நோக்கில் ஜிஎஸ்டி சாலையில் கிளம்பாக்கத்தில் 86 ஏக்கரில் புதிய பேருந்து நிலையத்தை தமிழக அரசு கட்டமைத்துள்ளது. கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயரிட்ட இந்த […]
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப்பிரவேச விழாவில் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கி செல்வதற்கு திராவிட கழகம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தருமபுரம் ஆதினம் குரு மகா சன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்ல தடை விதித்து, மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார்.இதற்கு பாஜக,பாமக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில்,தனது உயிரே போனாலும் பரவாயில்லை என்றும் […]
ஆன்மீக அன்பர்கள் முதலமைச்சரை மனதார வாழ்த்துகின்றனர் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பெருவிதம். தமிழகத்தில் முழு ஊரடங்கிலும் சென்னை வடபழனி முருகன் கோயிலில் இன்று திட்டமிட்டபடி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில் பணியாளர்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. 108 சிவாச்சாரியார்கள், கோயில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் மட்டுமே கும்பாபிஷேகம் விழாவில் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் காண்பதற்காக வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. வடபழனி முருகன் கோயிலில் நாளை முதல் 4 […]
தீபத்தின் போது திருவண்ணாமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறித்து அமைச்சர் சேகர் பாபு விளக்கம். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 7ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், கொரோனா நோய்த்தொற்று முழுவதும் குறைந்தால் மட்டுமே கார்த்திகை தீபத்தின் போது திருவண்ணாமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவிற்கு பக்தர்களை அனுமதிப்பது குறித்து அனைத்து விதமான சூழல்களையும் ஆராய்ந்து முதலமைச்சரின் அனுமதியோடு முடிவெடுக்கப்படும் […]
சென்னை நுங்கப்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் புதிய வசதியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர் பாபு. தமிழகத்தில் கோயில் இடத்துக்கான வாடகையை ஆன்லைனில் செலுத்தும் வசதியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார். சென்னை நுங்கப்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் புதிய வசதியை துவக்கி வைத்த அமைச்சர், கோயில் இடத்தில் உள்ள வாடைகைதாரர்கள் இணைய வழியில் வாடகை செலுத்தலாம் என தெரிவித்தார். இணையவழி வாடகை மூலம், எவ்வளவு […]
கொரோனா குறைந்தவுடன் வாரத்தில் 7 நாட்களும் பக்தர்களுக்காக கோயில்கள் திறக்கப்படும் என்று அமைச்சர் சேகர் தகவல். தமிழகத்தில் கொரோனா பரவலால் இம்மாதம் இறுதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் கோயில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தில் 3 நாட்களில் பக்கதர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை ஒரு சில அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திரையரங்குகள் திறப்புக்கு மட்டுமே அனுமதி வழங்கிய அரசு, ஏன் […]
அறிவிப்புகளை முதல்வர் செயல்படுத்துகிறார் என்று இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு தகவல். தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு, தடுப்பூசிதான் கொரோனாவை வெல்லும் பேராயுதம், சென்னை இந்த முயற்சியில் வெற்றிநடை போடுகிறது, இந்தியாவிலேயே முன்மாதிரி மாவட்டமாக சென்னை விளங்கும் வகையில் அதன் செயல்பாடுகள் அமைந்துள்ளன என்றார். இதனைத்தொடர்ந்து பேசிய […]
கோயில் சொத்துக்களை அபகரிப்பவர்களை கைது செய்வதற்கான சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல். கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளும் மசோதா இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கம் செய்யப்பட உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சட்ட மசோதாவை தாக்கல் செய்கிறார். கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தால் கைது செய்து ஜாமீனில் விட முடியாத அளவிற்கு சட்ட திருத்தம் செய்யப்பட்டியிருப்பதாகவும், ஏற்கனவே உள்ள சட்டத்தில் கைது செய்வதற்கான வழிவகை இல்லை என்பதால், […]
பெண் காவலரை பாதுகாப்பு பணியில் இருந்து விடுவித்த ரக்ஷாபந்த சகோதரர் முதல்வர் மு.க ஸ்டாலின் என்று அமைச்சர் சேகர் பாபு பேரவையில் புகழாரம். தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, இந்து சமய அறநிலையத்துறையில் முதன்முறையாக 110 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய அமைச்சர் சேகர் பாபு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது பெரியாரின் கனவு. அதை அண்ணா நிறைவேற்ற முயற்சித்தார், கலைஞர் சட்டமாக்கினார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி […]
திருக்கோயில்களில் மொட்டையடித்தால் இனி கட்டணம் இல்லை என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர்சேகர் பாபு அறிவிப்பு. தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் மொட்டை அடிக்க இனி கட்டணம் வசூலிக்கப்படாது என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தமிழக சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இதுபோன்று, மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் திருமணம் நடத்த கட்டணம் இல்லை என்றும் அறிவித்துள்ளார். மேலும், இந்து அறநிலையத்துறை சார்பில் 10 இடங்களில் கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ரூ.641 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல். தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை கொள்கை விளக்க குறிப்பு பேரவையில் கொடுக்கப்பட்டது. அதில், திமுக அரசு அமைந்த பிறகு 203 ஏக்கர் அளவிலான வேளாண் நிலங்களும், 170 கிரவுண்டு அளவிலான காலி மனைகளும், மீட்கப்பட்டு திருக்கோயிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றும் இதன் சொத்து மதிப்பு ரூ.641 கோடி […]