திமுகவில் இணையவுள்ளதாக ம.நீ.மவின் முன்னாள் துணைத்தலைவர் ஆர்.மகேந்திரன் அறிவிப்பு!

After leaving the People's Justice Center, Mahendran will join the DMK this evening in the presence of Chief Minister MK Stalin.

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய மகேந்திரன் இன்று மாலை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார்.

சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியடைந்ததை தொடர்ந்து அக்கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் விலகுவதாக செய்தியாளர்களை சந்தித்து அறிவித்திருந்தார்.

இதனால் அக்கட்சியின் மீது பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். கட்சியின் மீதும், கமல்ஹாசன் மீதும் மகேந்திரன் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய மகேந்திரன் இன்று மாலை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையவுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைவதற்கான பட்டியலையும் வழங்கவுள்ளார்.

unknown node