தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி – முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து..!

Former Union Minister Pon Radhakrishnan has congratulated RN Ravi on his appointment as the new Governor of Tamil Nadu.

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி அவர்களுக்கு,முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் புதிய ஆளுநராக ரவீந்திர நாராயண ரவி நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று இரவு உத்தரவு பிறப்பித்தார்.இதனையடுத்து,ஆர்.என்.ரவி அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி அவர்களுக்கு,முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக,அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“தமிழக ஆளுநராக பொறுப்பேற்க இருக்கும், முன்னாள் தேசிய பாதுகாப்பு துணை செயலாளர் , நாகாலாந்து ஆளுநராகவும், பல ஆண்டுகளாக ஜம்மு, காஷ்மீர் மற்றும் நாட்டின் வட கிழக்குப் பகுதிகளில் பணியாற்றிய அனுபவமும் கொண்ட மேதகு ஆர்.என்.ரவி அவர்களின் பணி சிறக்க எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’,என்று பதிவிட்டுள்ளார்.

unknown node