முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தான் டான்ஸிங் ரோஸ் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலகல பதில்!!

I saw the criticism of former minister Jayakumar regarding the Sarpatta Parambarai film.

சார்பட்டா பரம்பரை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் பார்த்தேன் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்.

சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சார்பட்டா பரம்பரை படத்தில் விடுபட்ட காட்சி என ஜெயக்குமார் பாக்சிங் செய்வது போல் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளிவந்து இருப்பதாகவும், சார்பட்டா படத்தில் டான்ஸிங் ரோஸ் தான் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என சமூக வளைதளங்களில் கூறி வருவதை நான் பார்த்தேன் என்று சார்பட்டா படம் விவகாரம் குறித்த கேள்விக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்.

இதனிடையே, பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா கதநாகனாக நடித்து வெளியாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வடசென்னை மக்களிடையே 70களில் குத்துச்சண்டை போட்டி மீது இருந்த ஆர்வம் குறித்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் எமர்ஜென்சி காலத்தில் தமிழகத்தில் நிலவிய அரசியல் சூழலை பா.ரஞ்சித் வெளிப்படையாக காட்டியுள்ளார்.

இதற்கு ஒரு தரப்பினரிடையே வரவேற்பை பெற்றாலும், சிலர் இதனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது இணையத்தில் பெரும் விவாதமாக மாறியுள்ளது. இந்த சூழலில், சார்பட்டா பரம்பரை’ படத்துக்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டியிருந்தார்.

அதில், சார்பட்டா பரம்பரை படத்தில் எம்.ஜி.ஆருக்கும் விளையாட்டுத் துறைக்கும் எதுவுமே தொடர்பில்லை என்பது போலவும், முழுக்க முழுக்க திமுகவின் பிரச்சாரப் படமாகவே எடுக்கப்பட்டுள்ளது என்றும் குற்றசாட்டியிருந்தார். குத்துச்சண்டையை மிகவும் நேசித்த ஒரே அரசியல் தலைவர் எம்ஜிஆர் தான். குத்துச் சண்டையில் பங்கேற்பதாக முகமது அலியை எம்ஜிஆர் சென்னைக்கு அழைத்து வந்தார்.

மேலும், எத்தனையோ வீரர்களை ஊக்குவித்த எம்ஜிஆரை ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் தவறாகச் சித்திரித்துள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அறிக்கையில் தெரிவித்திருந்தார். மேலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தான் குத்துசண்டை விளையாடும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பத்திட்டுள்ளார்.

unknown node