பரபரப்பு : எடப்பாடி பழனிசாமி சென்ற கார் மீது செருப்பு வீச்சு ...!

A complaint has been lodged with the police that an insurgent had thrown sandals at the car driven by former Chief Minister Edappadi Palanisamy.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்ற கார் மீது அமமுகவினர் செருப்பு வீசியுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்படி பழனிசாமி மற்றும் ஆயிரத்துக்கு மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.

அதிமுகவினர் மட்டுமல்லாமல் அமமுகவினரும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு திரும்பியபோது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சென்ற கார் மீது செருப்பு வீசியதாக அமமுகவினர் மீது போலீஸில் புகார்  அளிக்கப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் அவர்களின் தூண்டுதலின் பெயரில் அமமுகவினர் செருப்புகளை வீசியதாகவும். அவர்கள் தாக்குதல் நடத்துவதற்காக இரும்பு, தடி, கம்பு, கத்தி போன்ற ஆயுதங்களை எடுத்து வந்ததாகவும் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.