எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்ற கார் மீது அமமுகவினர் செருப்பு வீசியுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்படி பழனிசாமி மற்றும் ஆயிரத்துக்கு மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். அதிமுகவினர் மட்டுமல்லாமல் அமமுகவினரும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை […]
ராகுல் காந்தி, 5-ம் வகுப்பு சிறுவன் ஒருவனுக்கு, விளையாட்டு தேவைக்காக ஸூ வாங்கி தருவதாக உறுதி அளித்த நிலையில், அதனை வாங்கி அனுப்பியுள்ளார். சமீப காலமாகவே ராகுல் காந்தி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிற நிலையில், மக்களுடன் மக்களாய் மிகவும் சகஜமான முறையில் பழகி வருகிறார். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில், தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட போது, 5-ம் வகுப்பு சிறுவன் ஒருவனுக்கு, விளையாட்டு தேவைக்காக ஸூ வாங்கி தருவதாக உறுதி அளித்து இருந்தார். மேலும், அவர் […]
சமூக விலகலை கடைபிடிக்க காலணி தயாரிப்பாளர் செய்த புதுவிதமான காலணி. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து, பல நாடுகளை தாக்கி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள், இந்த வைரஸை அழிப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்ள, மக்கள் வெளியில் வரும் போது முக கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக விலகலை […]
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சோழன் இவர் மீது காலப்பட்டு சந்திரசேகர் கொலை , முத்தியால் பேட்டை ரவுடி அன்பு ரஜினி கொலை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. இந்நிலையில் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி சோழன் தற்போது காலாப்பட்டு மத்திய சிறையில் உள்ளார். இந்நிலையில் கொலை வழக்கு விசாரணைக்காக மத்திய சிறையில் இருந்து சோழனை புதுச்சேரி காவல் துறையினர், புதுச்சேரி நீதிமன்றத்தில் அழைத்து வந்தனர். அப்போது ரவுடி சோழன் கூலிங்கிளாஸ் […]
6-10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ” ஷூ ” வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது .அந்த வகையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் அண்மையில் கூறுகையில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செருப்புக்கு பதில் இலவச ஷு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று கூறினார்.இது மாணவர்கள் மத்தியில் சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் இன்று 6-10 ஆம் […]
விளையாட்டு வீரர்களுக்கான காலணியை அதாவது (ஷூ )-வை சிறந்த முறையில் தயாரித்து விற்பனை செய்து வரும் அமெரிக்காவை சார்ந்த “நைக்” நிறுவனம்.உலகின் தலைசிறந்த நிறுவனமாக வலம் வருகிறது. இந்த நிறுவனத்தை நிறுவி வரும் தடகளப் பயிற்சியாளர் பில் போவர்மேன் கடந்த 1972 -ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி போது தடகள வீரர்களுக்காக ஷூ ஒன்றை தயாரித்தார். அதை “மூன் ஷூ “என்று அழைக்கப்பட்டது. அப்போது மொத்தமாக 12 ஜோடி மூன் ஷூ க்களை அப்போது அவர் தயாரித்து […]
நடிகை தமன்னா அவர்கள் ஹைதராபாத்தில் ஒரு புதிய நகைக்கடையை திறக்க சென்றிருந்தார். அப்போது அவரை காண மக்கள் கூட்டம் அலைமோதியது. காரில் இருந்து இறங்கிய தமன்னா தனது ரசிகர்களுடன் நின்று புகைப்படம் எடுத்து கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் அவர் மீது செருப்பை வீசியுள்ளார். அது தமன்னா மீது படாமல் அருகில் இருந்த பாதுகாவலர் மீது விழுந்தது. சுதாரித்து கொண்ட பாதுகாவலர்கள் அவ்வளவு பெரிய கூட்டத்தில் யார் செருப்பு இல்லாமல் உள்ளார் என பார்த்து செருப்பு […]