உலக வரலாற்றில் முதன் முறையாக ரூ .3 கோடிக்கு ஏலம் போன ஷூ!

Default Image

விளையாட்டு வீரர்களுக்கான காலணியை அதாவது (ஷூ )-வை சிறந்த முறையில் தயாரித்து விற்பனை செய்து வரும் அமெரிக்காவை சார்ந்த “நைக்” நிறுவனம்.உலகின் தலைசிறந்த நிறுவனமாக வலம் வருகிறது.

இந்த நிறுவனத்தை நிறுவி வரும் தடகளப் பயிற்சியாளர் பில் போவர்மேன் கடந்த 1972 -ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி போது தடகள வீரர்களுக்காக ஷூ ஒன்றை தயாரித்தார். அதை  “மூன் ஷூ “என்று அழைக்கப்பட்டது.

அப்போது மொத்தமாக 12 ஜோடி மூன் ஷூ க்களை அப்போது அவர் தயாரித்து கொடுத்தார். இந்நிலையில் பில் போவர்மேன் தயாரித்த ஒரு ஜோடி மூன் ஷூ வை அண்மையில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஏலம் விடப்பட்டது.

அப்போது அந்த மூன் ஷூவை கனடாவை சேர்ந்த மைல்ஸ் நடால்  என்பவர் 4 லட்சத்து 37 ஆயிரத்து 500  அமெரிக்க டாலருக்கு வாங்கினார். (இந்திய மதிப்பில் 3 கோடியே  ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்) . இதன் மூலம் உலக வரலாற்றில் அதிக  தொகைக்கு ஏலம் போன ஷூ என்ற சாதனையையும் படைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்