அரசு பேருந்துகளின் ஆயுட்காலம் நீட்டிப்பு – தமிழ்நாடு அரசு உத்தரவு.!

Government of Tamil Nadu has issued an order increasing the lifespan and age of government buses.

அரசு பேருந்துகளின் ஆயுட்காலம் மற்றும் கண்டம் செய்யும் வயதை அதிகரித்து உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியீடு.

தமிழக அரசு விரைவு பேருந்துகளின் ஆயுட்காலம் தற்போது 3 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோ மீட்டர் என உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை இனி வரும் காலங்களில் அரசு விரைவு பேருந்துகள் 7 ஆண்டுகள் வரை இயங்கலாம் அல்லது 12 லட்சம் கி.மீ. தூரம் பயணிக்கலாம் என போக்குவரத்துத்துறை செயலாளர் தயானந்த கட்டாரியா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஏற்கனவே விரைவுப் பேருந்துகளுக்கு 3 ஆண்டுகள் இயங்கலாம் அல்லது 7 லட்சம் கி.மீ. தூரம் இருந்தது. விரைவுப் பேருந்துகள் அல்லாத பிற அரசு பேருந்துகளின் ஆயுட் காலம் தற்போது 7 லட்சம் கிலோ மீட்டர் அல்லது 6 ஆண்டு காலம் என்று உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது இனி வரும் காலங்களில் 9 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோ மீட்டர் என நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய சாலை வசதிகள், நவீன தொழில் நுட்பம் கொண்ட பேருந்துகள் என்பதாலும், நவீன வடிவமைப்பு காரணமாகவும் இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node